12 ஆம் வகுப்பு வரலாற்று பாடத்தில் ஹரப்பா நாகரிகம் குறித்து புதிய மாற்றம்- என்.சி.இ.ஆர்.டி

ஹரப்பா நாகரிகத்தின் வழித்தோன்றல்களே தற்போதைய இந்தியர்கள்.புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டம்.
12 ஆம் வகுப்பு வரலாற்று பாடத்தில் ஹரப்பா நாகரிகம் குறித்து புதிய மாற்றம்- என்.சி.இ.ஆர்.டி
Published on

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹரப்பா நாகரிகத்தின் தோற்றம் மற்றும் வீழ்ச்சி பற்றிய வரலாற்று பாடத்தில் புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

அதில், அரியானாவில் உள்ள சிந்து சமவெளி தளமான ராகிகர்ஹியில் உள்ள தொல்பொருள் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட பண்டைய டி.என்.ஏ பற்றிய சமீபத்திய ஆய்வுகள், ஹரப்பான்களும் வேதகால மக்களும் ஒரே மாதிரியானவர்களா என்பது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிக்கு ஆரிய குடியேற்றத்தை நிராகரித்தது.

ஹரப்பா நாகரிகத்தின் வழித்தோன்றல்களே தற்போதைய இந்தியர்கள். ஆரிய படையெடுப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி என்.சி.இ.ஆர்.டி அமைப்பு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது

'5,000 ஆண்டுகாலமாக எந்த இடறுமின்றி இந்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்' என என்.சி.இ.ஆர்.டி 12-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

'ஹரப்பா மக்களின் மரபணு இன்று வரை தொடர்கிறது. மேலும், தெற்காசிய மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் ஹரப்பா மக்களின் வழித்தோன்றல்களே', என என்.சி.இ.ஆர்.டி கூறுகிறது

ஆரம்ப கால ஹரப்பா மற்றும் பிற்பகுதி ஹரப்பா நாகரிகங்களுக்கு இடையே 'இடைவெளி இருந்தது' பற்றிய தகவல்களும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளன.

'ஹரப்பன்களுக்கும் வைதீக (Vedic) மக்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தியும் புதிய பாடத்தில் என்.சி.இ.ஆர்.டி சேர்த்துள்ளது.

ஆரியர்களின் குடியேற்றத்தை நிராகரிக்க (அரியானா) ராக்கிகர்கி தளத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சியை என்.சி.இ.ஆர்.டி குறிப்பிடுகிறது

இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com