என் மலர்
நீங்கள் தேடியது "பிரிவினை"
- பிரிவினை தவிர்க்க முடியாதது அல்ல என்றும், அது தவறான முடிவுகளால் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
- முஸ்லிம் அல்லாதவர்களுடன் சமத்துவத்தை மறுக்கும் முஸ்லிம் தலைவர்களின் 'முஸ்லிம் அரசியல்' உணர்வே பிரிவினைக்கு காரணம்
மத்திய அரசு என்சிஇஆர்டி (NCERT) புதிய பாடத்திட்டத்தில் இந்திய பிரிவினை பற்றிய தகவல்களில் மாற்றங்களை செய்துள்ளது. 6-8 வகுப்பு மற்றும் 9-12 வகுப்பு பாடப்புத்தகங்களில் இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 அன்று அனுசரிக்கப்படும் 'பிரிவினை பயங்கரங்களின் நினைவு நாள்' (Partition Horrors Remembrance Day) குறித்த குறிப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
6 முதல் 8 ஆம் வகுப்பு புதிய பாடதிட்டத்தில், 'பிரிவினைக்குக் காரணமான குற்றவாளிகள்' என்ற தலைப்பில், இந்தியப் பிரிவினைக்கு மூன்று பேர் பொறுப்பு எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன்படி, பிரிவினையைக் கோரிய முகமது அலி ஜின்னா, அதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைமை, அதை நடைமுறைப்படுத்திய மவுண்ட்பேட்டன் பிரபு ஆகியோர் குற்றவாளிகள் என கூறப்பட்டுள்ளது.
பிரிவினை தவிர்க்க முடியாதது அல்ல என்றும், அது தவறான முடிவுகளால் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் டொமினியன் அந்தஸ்து வழங்குவதன் மூலம் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்க நினைத்ததாகவும், ஆனால் காங்கிரஸ் இந்த திட்டத்தை நிராகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு போருக்கு பயந்து நேரு மற்றும் பட்டேல் பிரிவினையை ஏற்றுக்கொண்டனர் என்றும், அதன் பிறகு மகாத்மா காந்தியும் தன் எதிர்ப்பைக் கைவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம், முஸ்லிம் அல்லாதவர்களுடன் சமத்துவத்தை மறுக்கும் முஸ்லிம் தலைவர்களின் 'முஸ்லிம் அரசியல்' உணர்வே பிரிவினைக்கு காரணம் எனக் கூறுகிறது.
பிரிவினைக்குப் பிறகு காஷ்மீர் சிக்கல், பாகிஸ்தானுடனான போர்கள், பயங்கரவாதம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புச் செலவுகள் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கிடையே என்சிஇஆர்டி புதிய பாடத்திட்டத்தில் வரலாற்றின் உண்மைகள் சிதைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன.
- கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தார்கள்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
ஆங்கிலேயர் அன்று செய்த அதே பிரிவினையை தி.மு.க.வும், காங்கிரசும் செய்து வருகிறது.
வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்த்துள்ளது. சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி என்று போலியாக கூறுகிறது. சிறுபான்மையினருக்கு தி.மு.க.-காங்கிரஸ் என்ன செய்தது?
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தார்கள்.
தற்போது அது 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 36 சதவீதம் பேர் சிறுபான்மையினர். உஜ்வாலா திட்டத்தில் பயன் பெறுபவர்களில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியை விட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன.
வருகிற பாராளுமன்ற தேர்தல் ஊழலற்ற மோடிக்கும் ஊழல் ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கும் எதிரான தேர்தல்.
இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.






