search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity consumers"

    • செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறுகிறது.
    • மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குள்பட்ட மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்பு கூட்டம்நாளை 7 ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது என்று செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குள்பட்ட மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்பு கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை 7 -ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் மு.ராஜாத்தி தலைமையில் நடைபெறுகிறது. இதில், உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குட்பட்ட மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் முத்துகுட்டிக்கு உத்தரவிட்டார்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் முத்துகுட்டிக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். கோடைகாலம் நடைபெற்று வருவதால் கோடை காலத்தில் ஏற்படும் திடீர் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மாலை 6 மணிக்கு மேல் மின் நுகர்வு அதிகம் இருக்கும் காரணத்தால் அனைத்து அதிகாரிகளும் தொடர் கண்காணிப்பில் இருக்கவும் தங்கு தடையின்றி மின் வினியோகம் வழங்கவும் உத்தரவிட்டார்.

    • ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.
    • இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

    தாராபுரம் :

    தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மானூர்பாளையம் மின்சார வாரிய பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட காசிலிங்கபாளையம், நிறையூர், பெரியகுமாரபாளையம், மேற்கு சடையம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.

    எனவே மின் நுகர்வோர் கடந்த பிப்ரவரி மாதம் செலுத்திய மின் கட்டணத்தை ஏப்ரல் மாதத்திற்கும் செலுத்தலாம். இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள–ளது.

    • நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • கூட்டத்தில் நெல்லை நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துகுட்டி மற்றும் அதிகாரிகள், அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் நடைபெற்றது. நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் நெல்லை நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துகுட்டி மற்றும் அதிகாரிகள், அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    ×