search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர்க்கும் முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    குறைதீர்க்கும் முகாம்

    • சிவகங்கையில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 352 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட 5 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ், தலா ரூ.1,000 வீதம் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளையும், இளையான்குடி கிளை, தெற்கு கீரனூர் (வடக்கு) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் 16 பயனாளிகளுக்கு கிசான் கடன் திட்டத்தின் கீழ், ரூ.3 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலான கறவை மாட்டு பராமரிப்புக் கடனுதவிகளும், இளையான்குடி கிளை, நெஞ்சத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் 6 பயனாளிகளுக்கு கிசான் கடன் திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டிலான கறவை மாட்டு பராமரிப்புக் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.

    வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றுவதற்கென ரூ.1 லட்சத்து 34ஆயிரத்து 200 மதிப்பீட்டில் பின்னேற்ப்பு மானியத் தொகைக்கான ஆணைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1 ஹெக்டேர் பரப்பளவில் பழச்செடிகள், கால்நடை, தேனீ வளர்ப்பு மற்றும் மண்புழு உரக்கூடம் அமைப்பதற்கென தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மானியத் தொகைகான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு தேய்ப்புப்பெட்டியையும் என ஆக மொத்தம் 36 பயனா ளிகளுக்கு ரூ.9 லட்சத்து 63 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    Next Story
    ×