search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College Girls"

    • தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உப்பு க்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த பால்கரு ப்பையா மகள் பால்பாக்கி யம் (வயது 15). இவர் அங்குள்ள பச்சையப்பா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் முத்து வீரி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் பாலக்கோம்பை கென்னடி நகரைச் சேர்ந்த கருப்பையா மகள் கீர்த்தனா (19). இவர் வீரபாண்டியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் ஜெயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் சந்திரசேகர் (19). இவர் டிரம்ஸ் செட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று டிரம்ஸ் செட் அடிக்கும் பணிக்காக வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவிகள் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொ.பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 19). இவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இவர் செக்கானூரணி பகுதியில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரமங்கலம் அருகே உள்ள சக்கரப்ப நாயக்கனூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகள் கௌசல்யா (வயது 19). நிலக்கோட்டை அரசு கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஜெயபாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • சில பஸ்களில் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வார்கள்.
    • வேனுக்குள் அளவுக்கு அதிக சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பின்னர் அரசு பஸ்களில் ஏறுவதற்காக மாணவிகள் கூட்டம் அலைமோதும். அப்போது சில பஸ்களில் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வார்கள். இதை யடுத்து அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு பஸ்சுக்குள் ஏறி சென்று பயணிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் பஸ்களில் கூட்டம் அதிக மாக இருப்பதாலும், குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து வரும் மாணவிகள் தனியார் வேன்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு மாணவிகளை ஏற்றி வரும் வேன்கள் மிகுந்த வேகத்து டன் வருவதாகவும், வேனுக்குள் அளவுக்கு அதிக சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்வதாகவும் சமூக ஆர்வ லர்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் வேனுக்குள் போதிய இருக்கைகள் உள்ள போதிலும் மாணவி கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யாமல், படிக்கட்டுகளில் நின்று கொண்டும், பாடல்களுக்கு ஆடிக்கொண்டும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே மாணவிகளை ஏற்றி செல்லும் வாகன ங்களின் டிரைவர்கள், மாணவிகளை இருக்கையில் அமரச்செய்து கல்லூரிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகாசி தனியார் கல்லூரி வரலாற்று துறை மாணவர்கள் கீழடி, விஜயகரிசல்குளம், சிவகளை உள்ளிட்ட அகழாய்வு மையங்கள் மற்றும் வரலாற்று தொன்மை வாய்ந்த பல்வேறு இடங்களுக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் வரலாற்று துறை மாணவர்களுக்கு கல்வெட்டுகள் குறித்த 5 நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டெழுத்து, தமிழி, கிரந்தம் உள்ளிட்ட எழுத்துக்களை கண்டறிவது, படிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள வடபத்ரசயனர் சன்னதியில் மாணவிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வடபத்ரசயனர் உட்பிரகாரத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுப்பது குறித்து வரலாற்று ஆய்வாளர் உதயகுமார், உதவியாளர் முத்துபாண்டி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    இதில் வரலாற்று துறை தலைவர் ம்யா, பேராசிரியர்கள் வெண்ணிலா, கலைவாணி மற்றும்

    150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பேராசிரியர் கீதாநாச்சியார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவிற்கான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று தமிழ் மொழி யின் சிறப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன் பெறும் வகையில் நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணி சென்று, நிறைவாக நகரின் முக்கிய பகுதியான அரண்மனை பகுதியை வந்தடைந்தன.

    அப்போது கலெக்டர் பேசுகையில், முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை பாதுகாக்கும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல் கோப்புகள் பராமரிப்பிலும் முழுமையாக தமிழ் மொழியில் பராமரித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதை எடுத்துரைக்கும் வண்ணம் மேலும் வணிகர்கள் தங்கள் நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழ் மொழியில் வைத்திட வேண்டும், என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு, அரசு மகளிர் கலை கல்லூரி பேராசிரியர் கீதாநாச்சியார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 606 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • இதனை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் சிவ கங்கை மாவட்டத்தில் முதற் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவிகளுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, வங்கிகளின் முதன்மை மேலாளர்கள் விமல்காந்த், (இந்தியன் வங்கி), ராமகிருஷ்ணன் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே கல்லூரி மாணவிகள் மாயமானார்கள்.
    • தாய் ரேணுகா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சுவ லட்சுமி(23).

    ராமையா குடும்பத்தினர் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். ராமையா கடந்த 1½ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சுவலட்சுமி அமெரிக்காவில் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    செமஸ்டர் தேர்வு முடிந்து 4 மாதத்திற்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார். திரும்பவும் அமெரிக்க செல்ல வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். ஆனால் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 13ந் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தாய் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லாண்டி. இவரது மகள் தனசுபா (வயது19). இவர் உசிலம்பட்டி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாய் ரேணுகா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளையான்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
    • இதில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

     மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராம பகுதியில் சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தலின்படி, இளையான்குடி பேரூராட்சி அலுவலகம், சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாமை நடத்தியது. முள்ளியரேந்தல், நெடுங்குளம் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய ஊராட்சிகளில் இந்த முகாம் நடந்தது. மாணவிகள் வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை பதிவு செய்து பேரூராட்சி அலுவலர்களிடம் மனுக்களாக வழங்கினர். இதில் இளையான்குடி பேரூராட்சி அலுவலர்களுடன் இணைந்து கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் செய்யது இப்ராஹிம், இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன் ஆகியோர் உடன் சென்றனர். இந்த பணியில் ஈடுபட்ட மாணவிகளை கல்லூரி முதல்வர் அப்பாஸ்மந்திரி பாராட்டினார்.

    • திருச்சி காவேரி கல்லூரி மாணவிகளுக்கு கவிதை, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன
    • ஆங்கிலத்துறை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்ற மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்

    திருச்சி:

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறையின் 'அரோரா மன்றம்' சார்பில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான 'தனித்திறன் தேடல்' போட்டிகள் கல்லூரி காவேரி அரங்கத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் வி.சுஜாதா வாழ்த்துரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கவிதை, பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்நிகழ்வுகளுக்கான நடுவர்களாக முன்னாள் மாணவியர் புலத்தலைவர் முனைவர் ஜி.கனகா, சமூகப்பணித்துறைத் தலைவர் முனைவர் ஜி.மெட்டில்டா புவனேஸ்வரி, சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.வித்யா, வணிகவியல் உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ்.செளமியா, நுண்ணுயிரியல் உதவிப் பேராசிரியர் முனைவர் என்.ஜீனத்துனிஷா, சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் டி.அமிர்தா மேரி ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

    அரோரா மன்றத்தின் ெபாறுப்பாளர்கள் முனைவர் பி.ஹெலன்ஜோனா மற்றும் வி.சுதந்திரா தேவி ஆகியோர் முதுகலை ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் பி.ஊர்மிளா மற்றும் இளங்கலை ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.ஜெயஸ்ரீ அகர்வால் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ேபாட்டிகளை நடத்தினர்.

    பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

    • மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அரசு பள்ளிகளில் 6முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்படி மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்தனர். இதில் 25 சதவீத மாணவிகளின் வங்கிக்கணக்குகள் மாணவிகள் பெயரில் அல்லாது பெற்றோர் பெயரிலும், ஜாய்ன்ட் அக்கவுண்டாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:-

    கல்லுாரி தரப்பில் மாணவிகள் பெயர், பாடப்பிரிவு, கல்லூரி செயல்படும் மாவட்டம், சேர்ந்த ஆண்டு ஆகிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. பள்ளி தரப்பில் தமிழ்வழியில் பயின்றதற்கான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது வங்கி சார்பில் வங்கிக்கணக்குகள், ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.இதில், மாணவிகள் பலர் தங்கள் பெற்றோரின் பெயரில் உள்ள கணக்குகளை இணைத்துள்ளனர். எங்கள் கல்லூரியில் 298 பேரின் விவரங்கள் பதிவேற்றப்பட்டதில், 53 பேரின் விண்ணப்பங்களில் சிக்கல் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் கனரா வங்கி சார்பில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதே வங்கியில் மாணவிகள் பெயரில் கணக்கு துவங்கி, அப்டேட் செய்யும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையமானது 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தம் செய்யப்பட்டு 17-6-2022 அரசிதழ் பிரசுரிப்பின்படி எதிர்வரும் 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் விவரங்களை பெறுதல் என்பது முழுவதும் வாக்காளர்களின் தன் விருப்பத்தின் அடிப்படையிலானது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 1-8-2022 முதல் 31-3-2023-க்குள் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் என்பது வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் செம்மைபடுத்துவதற்கும், வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் இருப்பதற்காவும் ஆகும். வாக்காளர்கள் இணையதளத்தில் என்.வி.எஸ்.பி. போர்டல் மற்றும் வோடர் போர்டல் மூலமாகவும், வோடர் ஹெல்ப் லைன் ஆப் செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6பி என்ற விண்ணப்பத்தினை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம். தங்களது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம். ஆதார் எண்ணுக்கு பதிலாக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட தனி அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றியை சமர்ப்பிக்கலாம்.

    எனவே வருகிற 31-3-2023க்குள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தங்களது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இணைக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, தெற்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் சிறப்பு முகாம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது. கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் தாசில்தார் கலைவாணி மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×