

திருச்சி:
திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறையின் 'அரோரா மன்றம்' சார்பில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான 'தனித்திறன் தேடல்' போட்டிகள் கல்லூரி காவேரி அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் வி.சுஜாதா வாழ்த்துரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கவிதை, பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வுகளுக்கான நடுவர்களாக முன்னாள் மாணவியர் புலத்தலைவர் முனைவர் ஜி.கனகா, சமூகப்பணித்துறைத் தலைவர் முனைவர் ஜி.மெட்டில்டா புவனேஸ்வரி, சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.வித்யா, வணிகவியல் உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ்.செளமியா, நுண்ணுயிரியல் உதவிப் பேராசிரியர் முனைவர் என்.ஜீனத்துனிஷா, சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் டி.அமிர்தா மேரி ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அரோரா மன்றத்தின் ெபாறுப்பாளர்கள் முனைவர் பி.ஹெலன்ஜோனா மற்றும் வி.சுதந்திரா தேவி ஆகியோர் முதுகலை ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் பி.ஊர்மிளா மற்றும் இளங்கலை ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.ஜெயஸ்ரீ அகர்வால் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ேபாட்டிகளை நடத்தினர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.