என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள்.

    கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

    • கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பேராசிரியர் கீதாநாச்சியார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவிற்கான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று தமிழ் மொழி யின் சிறப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன் பெறும் வகையில் நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணி சென்று, நிறைவாக நகரின் முக்கிய பகுதியான அரண்மனை பகுதியை வந்தடைந்தன.

    அப்போது கலெக்டர் பேசுகையில், முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை பாதுகாக்கும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல் கோப்புகள் பராமரிப்பிலும் முழுமையாக தமிழ் மொழியில் பராமரித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதை எடுத்துரைக்கும் வண்ணம் மேலும் வணிகர்கள் தங்கள் நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழ் மொழியில் வைத்திட வேண்டும், என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு, அரசு மகளிர் கலை கல்லூரி பேராசிரியர் கீதாநாச்சியார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×