search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Python"

    • நகர முடியாமல் 3 மணிநேரம் தவிப்பு
    • வனத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தையொட்டி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.

    வனத்தை ஒட்டியுள்ள இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில், அடிக்கடி மான், மயில், மலைப்பாம்பு மற்றும் விஷபாம்புகள் இறையை தேடி வருகிறது.

    கிராமத்திற்கு நுழையும் மலைப்பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பெரிய ஏரியூர்கிராம மக்கள், சுடுகாட்டு அருகே உள்ள வன பகுதி வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று மரத்திற்கு அடியில் உணவு செறியூட்ட முடியாமல் தவித்து கொண்டு இருந்தது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    3 மணி நேரத்துக்கு மேலாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    இதற்கிடையில் மலைப்பாம்பு அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் திக்கி, திணறியது.

    ஒரு கட்டத்தில் மலை பாம்பு விழுங்கிய புள்ளிமானை, வெளியே கக்கியது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு, வனத்துறையினரை போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர்.

    காலதாமதமாக வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வனத்துறையிடம் ஒப்படைப்பு
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி விவசாய நிலத்தில் 13 அடி நீளம் உள்ள பெரிய மலை பாம்பு சிக்கியது.

    இந்த பாம்பை ஆம்பூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் வனத்துறை ஊழியர்கள் ஆம்பூர் காப்பு காட்டில் அந்த பாம்பை விட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிப்பட்டது.
    • 10 அடி நீளமுள்ளது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அன்னவாசல் ஆலங்குளம் பகுதியில் சிலர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது குளத்தின் கரையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு குட்டியை பாதி விழுங்கி விட்டு அசையமுடியாமல் கிடந்தது. இதைப்பார்த்த சிலர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மலைப்பாம்பிடம் இருந்து செத்த நிலையில், ஆட்டுக்குட்டியை இழுத்து வெளிேய கொண்டு வந்தனர். தொடர்ந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்புக் காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று இரவு 8 மணியளவில் பக்தர்கள் பூஜை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் அப்பகுதி இளைஞர்களே அந்த மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.

    • யார் அதிக பாம்புகளை கொல்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர்
    • வெல்பவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.25 லட்சம்

    அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் பாம்பு பிடித்து கொல்லும் ஒரு வினோத போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் ஆர்வமாக வந்து பங்கேற்கின்றனர்.

    இப்போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், பர்மிய வகை மலைப்பாம்புகளை பிடித்து கொல்ல வேண்டும். இதில், யார் அதிக பாம்புகளை கொல்கிறார்களோ அவர்கள் வெற்றியாளராக கருதப்படுகின்றனர்.

    புளோரிடா பைதான் சவால் எனும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கனடா, பெல்ஜியம் மற்றும் லாட்வியா நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கின்றனர்.

    16 அடி வரை நீளமுள்ள இந்த மலைப்பாம்புகளை பிடிக்க அதிக திறனும் துணிச்சலும் தேவைப்படும். ஆனாலும், ஆபத்தான இந்த போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், இதில் கிடைக்கும் புகழ் மற்றும் பணத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொள்கின்றனர்.

    போட்டியில் வெல்பவர்களுக்கு, பரிசுத் தொகை சுமார் ரூ.25 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புளோரிடாவின் தெற்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் உள்ள எவர்க்ளேட்ஸ் சதுப்புநில பகுதி. அங்கு அதிகமாக உலவும் பர்மிய மலைப்பாம்புகள் பிற உயிரினங்களை கொன்று, சுற்றுசூழல் சமநிலையை சேதப்படுத்துவதாகவும், அதனால் இந்த போட்டி அவசியமானது என உள்ளூர் வன மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.

    • ஜெயராஜ் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
    • மலைப்பாம்பு, ஜெயராஜ் வீட்டில் வளர்த்து வந்த கோழியை விழுங்கி இருந்தது தெரியவந்தது.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது வீட்டின் கழிவறையில் மலைப்பாம்பு ஒன்று இருந்தது.

    இதை பார்த்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து பார்த்தனர். அப்போது, மலைப்பாம்பு, ஜெயராஜ் வீட்டில் வளர்த்து வந்த கோழியை விழுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அட்டுக்கல் மலைப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

    • அடைகாக்கும் போது அதன் முட்டைகள் மீது யாராவது கை வைத்தால் ஆக்ரோஷமாகிவிடும்.
    • மலைப்பாம்பின் அருகே ஏராளமான முட்டைகள் இருப்பதை காண முடிகிறது.

    எல்லா உயிர்களும் தனது குட்டிகளை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சாதாரணமாக முட்டையிடும் இனங்கள் அதை அடைகாக்கும் போது அதன் முட்டைகள் மீது யாராவது கை வைத்தால் ஆக்ரோஷமாகிவிடும். அவ்வாறு ஜேப்ரூவர் என்ற உயிரியல் பூங்கா காப்பாளர் தனது பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ராட்சத மலைப்பாம்பு அருகே செல்கிறார்.

    அந்த மலைப்பாம்பின் அருகே ஏராளமான முட்டைகள் இருப்பதை காண முடிகிறது. அதில், ஒரு முட்டையை ஜேப்ரூவர் எடுக்க முயலும் போது மலைப்பாம்பு கோபம் அடைந்து அந்த காப்பாளரை நோக்கி சீறுவது போலவும், அவரின் தொப்பியை கொத்த முயற்சிப்பது போலவும் காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ 5.54 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் மலைப்பாம்புவை லாவகமாக கையாளும் காப்பாளரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • ஊத்துமலை அடிவாரம் திடீர்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டு அருகே நேற்று நள்ளிரவு சுமார் 10 அடி நீள உடனே மலைப்பாம்பு புகுந்தது.
    • மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்பு அந்த பாம்பு ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் விடப்பட்டது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரம் திடீர்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டு அருகே நேற்று நள்ளிரவு சுமார் 10 அடி நீள உடனே மலைப்பாம்பு புகுந்தது. உ இதுபற்றி ராஜேந்தி ரன் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீய ணைப்பு மற்றும் மீட்பு பணி கள் உதவி மாவட்ட அலுவ லர் சிவக்குமார் தலைமை யில் வீரர்கள் பிரதாப், திருப்பதி, திலீப்குமார், கலை யரசன், ஜெய்ரஞ்சித்குமார், உதயகுமார் ஆகியோர் விரைந்து சென்று மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்பு அந்த பாம்பு ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் விடப்பட்டது.

    • மின்சாரம் பாய்ந்து பாம்பு இறந்திருப்பதை கண்டு பிடித்தனர்.
    • மின்சாரத்தை துண்டித்த பின்பு டிரான்ஸ்பார்மரில் இறந்து கிடந்த மலைப்பாம்பை மின்வாரிய ஊழியர்கள் மீட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பத்தினம்திட்டா பகுதியில் நாரங்கானம் என்ற இடத்தில் சாலையோரம் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது.

    இந்த பகுதி எப்போதும் புதர் மண்டி காணப்படும். நேற்று இந்த வழியாக சென்றவர்கள், டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது, டிரான்ஸ்பார்மரையொட்டி வளர்ந்து நின்ற செடி, கொடிகள் வழியாக மலைப்பாம்பு டிரான்ஸ்பார்மரில் ஏறியது தெரியவந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து பாம்பு இறந்திருப்பதை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்த பின்பு டிரான்ஸ்பார்மரில் இறந்து கிடந்த மலைப்பாம்பை மின்வாரிய ஊழியர்கள் மீட்டனர். பின்னர் அது வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • காட்டில் பத்திரமாக விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் இக்பால். இவருக்கு சொந்தமான மாந்தோப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பையனப்பள்ளி பகுதியில் உள்ளது.

    இந்த மாந்தோப்பில் நேற்று தொழிலாளர்கள் கிழே விழந்து இருந்த மாங்காய்களை சேகரித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மலைப்பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன் பிறகு மாந்தோப்பில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    அதன் பிறகு வனத்துறையினர் அருகில் உள்ள காட்டில் பத்திரமாக மலை பாம்பை விட்டனர்.

    • பெரிய அளவிலான மலைப்பாம்பை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
    • பாம்புகள் அடிக்கடி குளங்களுக்கு வருவதாகவும் இதனால் காலையில் வயல் பணிக்கு செல்வது ஆபத்தாக உள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள பதினெட்டாம் படி பகுதியில் நெல் வயல்கள் மற்றும் பாசன குளங்கள் உள்ளன. இங்கு முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    அவர்கள் அதிகாலையிலேயே வயல்களுக்கு சென்று பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை வயல் பணிகளுக்குச் சென்ற அவர்கள், பதினெட்டாம்படி அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே ஏதோ ஊர்ந்து செல்வதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது, அது மலைப்பாம்பு என தெரியவர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பெரிய அளவிலான மலைப்பாம்பை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர். மேலும் சிலர் அங்கு வந்ததும் மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த பாம்பு வேறு எங்கோ சென்று பதுங்கி விட்டது.

    அந்த பகுதியில் உள்ள குளங்களில் மீன் பிடிப்பவர்கள் வலை விரித்துள்ளதால், அருகில் உள்ள மலைகளில் இருந்து பாம்புகள் அடிக்கடி குளங்களுக்கு வருவதாகவும் இதனால் காலையில் வயல் பணிக்கு செல்வது ஆபத்தாக உள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்தது
    • வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அன்னவாசல் அருகே மேலூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்து அச்சுறுத்துவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.


    ×