என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panagudi"

    • பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை புத்தேரி காட்டுப்பகுதியில் உபயோகத்தில் இல்லாத கல்குவாரி ஒன்று உள்ளது
    • யாரேனும் மிளாவை கொன்றிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை புத்தேரி காட்டுப்பகுதியில் உபயோகத்தில் இல்லாத கல்குவாரி ஒன்று உள்ளது. இதன் கரையில் மிளா ஒன்று இறந்து கிடந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்து கூந்தன்குளம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மிளாவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிளாவின் கழுத்து பகுதியில் காயம் இருக்கிறது. இதனால் தெற்கு கருங்குளம் பகுதி மலையில் இருந்து மேய்ச்சலுக்காக அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றபோது மிளாக்கள் சண்டையிட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த பகுதியில் விவசாய நிலங்களுக்குள் மிளா அடிக்கடி புகுந்து நாசப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இதனால் யாரேனும் மிளாவை கொன்றிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட தொழிலாளி
    • மூர்த்தி உட்பட 3 பேர் மணிகண்டனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் வெட்டினர்.

    பணகுடி:

    பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    நேற்று மாலையில் மணிகண்டன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த மூர்த்தி உட்பட 3 பேர் மணிகண்டனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் வெட்டினர்.

    இதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்ற மணிகண்டனின் தந்தை மனோகர் இதனை தடுத்துள்ளார். அவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    காயமடைந்த இருவரை யும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இச்சம்பம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

    • பணகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் தலைமை காவலர் லட்சுமி நாராயணன், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (24), வசந்தகுமார் (20) ஆகியோர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.

    பணகுடி:

    பணகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் தலைமை காவலர் லட்சுமி நாராயணன், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (24), வசந்தகுமார் (20) ஆகியோர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள்

    பணகுடியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரது லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லேப்டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுத்து 24 மணி நேரத்திற்குள் ேலப்டாப்பை கண்டுபிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • வெங்கடேசுக்கு சொந்தமான விவசாய தோட்டம் நவரைபத்து பகுதியில் உள்ளது.
    • தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஷ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் அருகே உள்ள நவரைபத்து பகுதியில் உள்ளது. இன்று காலை வெங்கடேஷ் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி வாலிபர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு பணகுடியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    • பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மகளிர் மேம்பாட்டுஅமைப்பின் சார்பாக பெண்களின் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஸ்மிதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு இளமைப் பருவ மாற்றங்கள் குறித்தும், பெண்களின் சுகாதாரம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

    வள்ளியூர்:

    பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மகளிர் மேம்பாட்டுஅமைப்பின் சார்பாக பெண்களின் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஸ்மிதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு இளமைப் பருவ மாற்றங்கள் குறித்தும், பெண்களின் சுகாதாரம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகி பொன் லட்சுமி தலைமை தாங்கினார். தாளாளர் தேவிகா பேபி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • ராஜலிங்கம் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த ராஜலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள கோவில்விளை அண்ணாநகரை சேர்ந்தவர் பொன்னுதுரை. இவரது மகன் ராஜலிங்கம்(வயது 32). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    பணகுடி அருகே உள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர் கார்த்தி(25). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கார்த்தியும், ராஜலிங்கமும் காவல்கிணறு பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை கார்த்தி ஓட்டி வந்த நிலையில், பணகுடி நெருஞ்சிகாலனியில் நான்கு வழிச்சாலை அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் பின்னால் அமர்ந்திருந்த ராஜலிங்கம் தூக்கி வீசப்பட்டார். தலையில் அவருக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கார்த்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் உயிரிழந்த ராஜலிங்கம் உடலை அவர்கள் மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனக்கு சொந்தமான வீட்டில் ஜார்ஜ்துரை தனியாக வசித்து வருகிறார்.
    • வீட்டின் கதவு திறக்கப்பட்டு வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் புதுக்கோட்டை தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ்துரை(வயது 79). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் ஜெரால்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    கடந்த 11-ந்தேதி ஜார்ஜ்துரை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றார். நேற்று மாலை ஊருக்கு திரும்பிய அவர் வீட்டுக்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு கள்ளச்சாவி போட்டு திறக்கப்பட்டு இருந்தது.

    அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த வெளிநாட்டு பணம் ரூ.10 ஆயிரம், விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஜார்ஜ்துரை அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • சக்திவேல் காவல் கிணறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பணகுடி:

    நாங்குநேரி அருகே உள்ள உன்னங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் சக்திவேல் (வயது19). மோட்டார் மெக்கானிக். இவர் நேற்று பணகுடி அருகே உள்ள காவல் கிணறு பகுதிக்கு மெக்கானிக் வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் காவல்கிணறு பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராதாபுரம் வட்டார குத்தகை விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே மதகநேரியில் திருவாடு துறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு உரிய குத்தகை மற்றும் அடவோலை வழங்க வலியுறுத்தி ராதாபுரம் வட்டார குத்தகை விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சங்கத் தலைவர் தனபால் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருவாடு துறை ஆதீன இடப் பிரச்சினை சம்பந்தமாக ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் 90 நாட்களுக்கு பிறகும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும்,விரைவில் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும், திருவாடுதுறை இட பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட மடாதிபதிகளை நேரில் சந்தித்து மனு அளிப்பது என்றும், மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது என்றும், 20 நாட்களுக்குள் பிரச்சி னைக்கு தீர்வு காணப்படா விட்டால் பாளையங் கோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணைய ஆணையர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மதகனேரி, செம்பிகுளம், கடம்பன்குளம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆண்டனி பிலிப் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
    • கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ஆண்டனி பிலிப் (வயது 36). இவர் வடக்கன்குளம்-காவல்கிணறு சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பிய அவர் நேற்று கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு விற்பனைக்காக வைக்க ப்பட்டு இருந்த செல்போன்கள், புளூடூத் உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொரு ட்கள் திருடப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக ஆண்டனி பிலிப் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • கலந்துகொண்ட அனைவருக்கும் விதைப்பந்து வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன் மற்றும் வழக்கறிஞரும், புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வேணுகோபால் தலைமை தாங்கினர்.பணகுடி நகராட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் ஓய்வு பெற்ற துணை அஞ்சல் நிலைய அதிகாரி செல்வராஜ், ஓய்வு பெற்ற காவல்துறை சார் ஆய்வாளர்களான தங்கப்பா மற்றும் எழில் , ஒன்லேர்ன் நிறுவன பிரதிநிதி கிளமெண்ட் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் தேவிகா பேபி வரவேற்று பேசினார். விழாவில் லட்சுமிதேவி கல்வி குழும தலைவரான அனுகிராகஹா, நிர்வாகிகள் டாக்டர் பொன்னு லட்சுமி மற்றும் ஆனந்த கண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ- மாணவிகள் தங்களது தனி திறமையை வெளிக்காட்டும் விதமாக கராத்தே, யோகா, சிலம்பம் மற்றும் ஸ்கேட்டிங் போன்றவற்றை செய்து அனைவரையும் கவர்ந்தனர். மாணவ- மாணவிகளின் நடனம் மற்றும் நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் விதைப்பந்து வழங்கப்பட்டது. பள்ளியின் கல்வி நிர்வாகி டாக்டர் சுந்தர் ராஜ் நன்றி கூறினார்.

    • அருண் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ரெயில்வே கேட்டில் பயங்கரமாக மோதியது.

    பணகுடி:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோவில் மேலத் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் அருண் (வயது 34). இவர் நேற்றிரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ரெயில்வேகேட்

    அவர் வள்ளியூர் அருகே ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது வேகத்தடையில் ஏறாமல் இருப்பதற்காக சாலையின் ஓரமாக மண் தடத்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வேகேட் மீது பயங்கரமாக மோதியது. இதில் அருண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று அருண் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×