பணகுடி அருகே பூட்டிய வீட்டில் பணம் திருட்டு

தனக்கு சொந்தமான வீட்டில் ஜார்ஜ்துரை தனியாக வசித்து வருகிறார்.வீட்டின் கதவு திறக்கப்பட்டு வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது.
பணகுடி அருகே பூட்டிய வீட்டில் பணம் திருட்டு
Published on

பணகுடி:

பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் புதுக்கோட்டை தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ்துரை(வயது 79). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் ஜெரால்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

கடந்த 11-ந்தேதி ஜார்ஜ்துரை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றார். நேற்று மாலை ஊருக்கு திரும்பிய அவர் வீட்டுக்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு கள்ளச்சாவி போட்டு திறக்கப்பட்டு இருந்தது.

அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த வெளிநாட்டு பணம் ரூ.10 ஆயிரம், விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஜார்ஜ்துரை அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com