என் மலர்
நீங்கள் தேடியது "student murdered"
- பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?
- பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு?
பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம்.
மு.க.ஸ்டாலின் "உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?" என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா?
ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது.
- திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவி ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் தம்மை காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், அவரைக் காதலிக்க ஷாலினி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த முனியராஜ், இன்று காலை மாணவி ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார்.
பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும் பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் பேருந்து நிறுத்தங்களிலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செவிமடுக்க திமுக அரசு தவறியதன் விளைவாகத் தான் ஓர் அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்; அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் சாதனை ஆகும்.
இராமேஸ்வரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விடுமுறை என்பதால் ஜனனி புலிவலம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்தார்.
- வீட்டுக்கு வெளியே கத்தி வெட்டு காயங்களுடன் லக்சயா அலறி கூச்சலிட்டார்.
ராணிப்பேட்டை:
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகத்குமார். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதியின் மகள் ஜனனி (வயது 15) மற்றும் ஒரு மகன் உள்ளார்.
ஜெகத்குமார், பிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனையடுத்து ஜெகத்குமார் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.
பிரியா தனது மகள் மகனுடன் திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி. கண்டிகையில் வசித்து வந்தார். அங்குள்ள தனியார் பள்ளியில் ஜனனி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ்-1 செல்ல தயாராக இருந்தார்.
விடுமுறை என்பதால் ஜனனி புலிவலம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அவருடைய உறவினர்கள் லக்சயா, சரண்யா ஆகியோரும் சென்னையில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்தனர்.
நேற்று காலை ஜெகத்குமார் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஜனனி லக்சயா ஆகியோர் இருந்தனர். அப்போது யாருக்கும் தெரியாமல் கே.ஜி கண்டிகையை சேர்ந்த சுப்பிரமணி (21)என்பவர் திடீரென அங்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டினார்.
இதனை லக்சயா தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த வாலிபர் லக்சயாவை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அவரை வீட்டுக்கு வெளியே தள்ளினார். வீட்டுக்குள் இருந்த ஜனனியை கத்தியால் வெட்டி சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜனனி துடிதுடித்து இறந்தார்.
வீட்டுக்கு வெளியே கத்தி வெட்டு காயங்களுடன் லக்சயா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் லக்சயாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஜெகத்குமார் வீட்டு முன்பாக திரண்ட மக்கள் இரும்பு கம்பியால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஜனனி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அங்கு பதுங்கி இருந்த வாலிபர் சுப்பிரமணியை சரமாரியாக அடித்தனர்
கொண்ட பாளையம் போலீசார் வாலிபர் சுப்பிரமணியை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுப்பிரமணி மற்றும் கத்தி வெட்டுப்பட்ட லக்சயா ஆகியோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று சுயநினைவு இல்லாமல் இருந்த சுப்பிரமணிக்கு நினைவு திரும்பியது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேலும் வீட்டுக்குள் என்ன நடந்தது என்பது குறித்து லக்சயாவிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மாணவி படித்து வரும் பள்ளி அருகிலேயே வாலிபர் சுப்பிரமணியின் வீடு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- படுகாயமடைந்த சேத்தன், கே.எம்.சி-ஆர்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் ஹுப்பள்ளி மொருசவீரா மடத்திற்கு அருகிலுள்ள காமரிபேட்டை குருசித்தேஷ்வர் நகரில் வசித்து வந்த மாணவன் சேத்தன் ரக்காசகி (வயது 15).
இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு செல்ல இருந்தான்.
சம்பவத்தன்று மாலையில் வீட்டின் தேனீர் அருந்திவிட்டு தனது தாயிடம் புதிய ஆடைகளை எடுத்து வைக்க சொல்லி விட்டு தெருவில் விளையாட சென்றான்.
இம்மாணவனும், எதிர்வீட்டில் வசிக்கின்ற 6-ம் வகுப்பு மாணவனும் நண்பர்கள் ஆவார்கள்.
2 பேரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செல்போனில் ஆன்லைன் வன்முறை வீடியோ விளையாட்டில் வருவதுபோது கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதில் ஆத்தரம் அடைந்த 6-ம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு ஓடிச் சென்று ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு வந்து 9-ம் வகுப்பு மாணவன் சேத்தன் ரக்காசகியின் வயிற்றில் குத்தி விட்டு வீட்டுக்கு சென்று பதுங்கி கொண்டான்.
படுகாயமடைந்த சேத்தன், கே.எம்.சி-ஆர்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து காமரிபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 6-ம் வகுப்பு மாணவனை போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முற்படும்போது அவர்களுடன் செல்ல மறுத்து சிறுவன் அடம் பிடித்தான்.
அம்மா போலீஸ் கூப்பிட்டு போறாங்க, நான் போக மாட்டேன் என குழந்தை போல் அடம்பிடித்தான்.
தான் செய்த விபரீத காரியத்தால் தன்னுடன் விளையாடிய நண்பனின் உயிர் போய் விட்டது என்று கூட அந்த சிறுவனுக்கு தெரியவில்லை.
அந்த சிறுவனை சமாதானப்படுத்தி வாகனத்தில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
கே.எம்.சி.ஆர்.ஐ மருத்துவமனையில் போலீஸ் கமிஷனர் சசிகுமார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 2 சிறுவர்களும் எதிர் எதிர் வீடுகளை சேர்ந்தவர்கள். ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சாதாரண விசயத்திற்காக கொலையில் முடிந்துள்ளது. சட்ட நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும். கொலையுண்ட சிறுவன் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தான். ஒரே மகன். பெற்றோர் ரொட்டி விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். இது ஒரு மனதை உடைக்கும் சம்பவம். கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பம் ஏழ்மையானது.
பள்ளியில் படிக்கின்ற சிறுவர்களை ஆக்சன் சினிமா , செல்போனில் ஆக்சன் கேம் வீடியோ விளையாட அனுமதிக்காதீர்கள். அது சிறுவர்களின் மனநிலையை வன்முறைமிக்கவர்களாக மாற்றிவிடும் என்றார்.
பப்ஜியை தடை செய்தது போல ப்ரீ பயர் செல்போன் விளையாட்டில் மூழ்கி கிடக்கும் சிறுவர் சமுதாயத்தை மீட்டெடுக்க இதுபோன்ற வன்முறை விளையாட்டுக்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
- மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் கிடைத்து விஷ்ணு பரத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி வந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணுபரத் (வயது 17). கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த அவன், பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தான்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அந்த பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவுக்கு நேற்று இரவு சென்று உள்ளான். அவர்கள் அனைவரும் கோவில் வளாகத்தின் அருகே நள்ளிரவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் சந்துரு (21) வந்தார். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர், பகுதி நேரமாக ஆட்டோவும் ஓட்டி வருகிறார். அவருக்கும், விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும் நடந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்துரு, தான் ஓட்டும் ஆட்டோவின் சாவியோடு இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால் விஷ்ணுபரத்தின் விலா மற்றும் பின்பகுதியில் குத்தி உள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். ஆத்திரத்தில் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த சந்துரு பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது ஆட்டோவில் விஷ்ணு பரத்தை தூக்கி போட்டுக்கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷ்ணு பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் கிடைத்து விஷ்ணு பரத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி வந்தனர். அப்போது சந்துரு, தனது ஆட்டோவில் விஷ்ணு பரத் உடலைக்கொண்டு வந்து வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.
பள்ளி மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேரில் வந்து பலியான விஷ்ணு பரத்தின் உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சந்துரு, நாளை நடைபெறும் திருவிழாவிற்கு நீ வரக்கூடாது என விஷ்ணு பரத்திடம் கூறியதாகவும், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பி ஓடிய சந்துருவை தேடிவந்தனர்.
இந்த நிலையில் அவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சந்துருவை கைது செய்ய கூடங்குளம் சென்றனர்.
பின்பு அவரை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-1 மாணவனை கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள் நகர் விலக்கில் இருந்து சேரகுளம் செல்லும் சாலையில் கெமிக்கல் கம்பெனி ஒன்று இயங்காமல் மூடி கிடக்கிறது. அந்த கம்பெனி வளாகத்துக்குள் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று மாலையில் மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த இளம்பெண்ணின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது.
அவரை யாரோ கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அந்த இளம்பெண் யார்? அவரை கொன்றது யார்? என்பது தெரியவில்லை. ஆகவே அது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த இளம்பெண் நெல்லை பேட்டை ரஹ்மத் நகர் பகுதியை சேர்ந்த மதார் மைதீன் என்பவரின் மகள் ஆஷிகா பர்வீன் (வயது 17) என்பது தெரியவந்தது. அவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு, கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.
நேற்று காலையும் வழக்கம் போல் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற அவர் மதியம் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, சற்று நேரத்தில் வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள பழைய கெமிக்கல் கம்பெனி வளாகத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
மாணவி ஆஷிகா பர்வீனை கொலை செய்தது யார்? அவர் சம்பவ இடத்திற்கு எப்படி சென்றார்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-
மாணவி ஆஷிகா பர்வீன் கம்ப்யூட்டர் மையத்துக்கு தினசரி சென்று வந்தபோது, மேலச்செவலை சேர்ந்த முருகன் மகன் சுந்தர்ராஜ் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 6 மாதமாக சுந்தர் ராஜும், ஆஷிகா பர்வீனும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதல் விவகாரம் ஆஷிகா பர்வீனின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆஷிகா பர்வீனுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற அவர் மதியம் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவரது தாயார், ஆஷிகா பர்வீன் செல்போனுக்கு பிற்பகல் 2 மணி அளவில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நிற்பதாகவும், காதலன் சுந்தர்ராஜனின் படம் தன்னிடம் உள்ளதால் அதை சுந்தர்ராஜிடம் திருப்பி கொடுத்து விட்டு வந்து விடுவேன். இனி அவரை சந்திக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதனால் அவரது பெற்றோரும் மாணவி ஆஷிகா பர்வீன் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து விடுவார் என்று அமைதியாக இருந்து விட்டனர். ஆனால் மாலை வரை ஆஷிகா பர்வின் வீடு திரும்பவில்லை. மேலும் அவரது செல்போன் தொடர்ந்து ‘ரிங்’ அடித்து கொண்டே இருந்ததால், பெற்றோர் சந்தேகம் அடைந்து தேடியுள்ளனர். அப்போது தான் ஆஷிகா பர்வின் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது அவர்களுக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் ஆஷிகா பர்வீனின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது அவருடன் சுந்தர்ராஜ் பேசியதும், இருவரும் ஒன்றாக அந்த பகுதிக்கு சென்றதும் தெரியவந்தது. இதனால் போலீசார் காதலன் சுந்தர்ராஜை தேடினார்கள். ஆனால் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவரது செல்போன் ‘சுவிட்ச்’ ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் போலீசார் சுந்தர்ராஜை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதையறிந்த சுந்தர்ராஜின் உறவினர்களும் அவரை தேடினார்கள். அப்போது உறவினர் வீட்டில் சுந்தர்ராஜ் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்கள் சுந்தர்ராஜை மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது ஆயிஷா பர்வீனை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுந்தர்ராஜை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து சுந்தர்ராஜ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-
ஆயிஷா பர்வீனை நான் 6 மாதமாக காதலித்து வந்தேன். எங்களது காதலுக்கு ஆயிஷா பர்வீன் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார்கள். அதற்கு ஆயிஷா பர்வீன் சம்மதித்தார். காதலித்தபோது நாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் எங்களிடம் இருந்தன. அதை பெறுவதற்காக ஆயிஷா பர்வீன் என்னை தொடர்பு கொண்டார்.
அப்போது ஊருக்கு வெளியே சென்று போட்டோவை தருகிறேன் என்று கூறி மூலக்கரைப்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றேன். அங்குள்ள காட்டு பகுதிக்கு வந்ததும் என்னை காதலித்து விட்டு வேறொரு வரை திருமணம் செய்ய எப்படி சம்மதிக்கலாம்? நீ என்னைதான் காதலிக்க வேண்டும் என மிரட்டினேன்.
அதற்கு அவள் என்னிடம் இருந்து போட்டோக்களை பெறுவதிலேயே குறியாக இருந்தாள். இதனால் ஆத்திரமடைந்த நான் ஆயிஷா பர்வீன் கைகளை கட்டி கீழே தள்ளி கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்த கொலையில் சுந்தர்ராஜுக்கு யாராவது உதவி செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன்படி வேறு யாருக்கும் கொலையில் தொடர்பு உள்ளதா? என்று சுந்தர்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சி சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சாமிவேல் (வயது 48). விவசாயி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது45).
இவர்களது கடைசி மகளான ராஜலட்சுமி அருகில் உள்ள தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சாமுவேலின் வீட்டின் அருகே குழந்தைவேல் மகன் தினேஷ்குமார் என்ற கார்த்தி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை எந்திரத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி மாவட்டங்களுக்கு நெல் அறுவடைக்கு சென்று விட்டு ஊர் திரும்பினார். குடிப்பழக்கம் கொண்ட தினேஷ்குமார் கடந்த 3 நாட்களாக போதையிலேயே சுற்றி வந்தார். பள்ளிக்கு சென்ற சிறுமி ராஜலட்சுமியை பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்வதும், சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று இரவு 7.30 மணி அளவில் வீட்டில் ராஜலட்சுமி மல்லிகை பூ கட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தினேஷ்குமார் ராஜலட்சுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் சின்னபொண்ணு பதறி அடித்தபடி ஓடி வந்தார்.
அப்போது தினேஷ்குமார், சின்னபொண்ணுவை கீழே தள்ளிவிட்டு விட்டு கையில் இருந்த அரிவாளால் ராஜலட்சுமியின் கழுத்தை கொடூரமாக அறுத்தார். இதில் ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறியது.
பின்னர் தலையை தனியாக துண்டித்து எடுத்தார். இதில் ராஜலட்சுமி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடலை வெளியே இழுத்து சென்றார். இதை பார்த்த அவரது தாய் கதறி அழுதபடி ஓடினார். பின்னர் ரத்தம் ரத்தம் சொட்ட சொட்ட துண்டித்த தலையை தளவாய்பட்டி- சுந்தராபுரம் சாலையின் நடுவே வைத்து விட்டு தினேஷ்குமார் தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் கேசவன், மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சிறுமியின் உடல், தலையை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி ராஜலட்சுமி, தினேஷ்குமார் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்தார். அவர் வீட்டிற்கு சென்று, பூக்கள் பறித்து வருவது வழக்கம். கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்த தினேஷ்குமார், மாணவியிடம் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. சைகோ போல சுற்றி திரிந்த தினேஷ்குமார் நேற்று மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு செய்ததுடன் மறுத்த அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
தினேஷ் குமாரின் மனைவி சாரதா கூறியதாவது:-
நெல் அறுவடை எந்திரம் வாங்க கடனுதவி கிடைக்காததால் தஞ்சாவூரில் நெல் அறுவடை எந்திர டிரைவர் வேலைக்கு தினேஷ்குமார் சென்றார். அங்கு உடன் வேலை பார்த்து தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி கோபத்தில் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அங்கு கொட்டகையில் தங்காமல், சில மாதங்களாக இரவில் சுடுகாட்டில் தூங்கியதால் இந்த நிலை வந்ததாக தினேஷ்குமார் கூறி வந்தார். இதனால் ஆத்தூரை சேர்ந்த வாகன உரிமையாளர் ராமு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். நீ மேலும் நீ மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வா என்று அவர் கூறி உள்ளார்.
10 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் நான் தான் ‘முனி’ என்று கூறி சாமி ஆடினார். சுடுகாட்டில் படுத்ததால் எனக்கு பேய், பிசாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், விஷம் குடித்து இறந்தவர்கள், கிணற்றில் விழுந்து இறந்தவர்கள் பெயரையும் கூறி வந்தார்.
அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜலட்சுமி எங்கு இருக்கிறார். உடனே இங்கு வரச் சொல். நான் அவரை பார்க்க வேண்டும் என கூறினார். உடனே நாங்கள், தினேஷ்குமாரின் முகத்தில் தண்ணீரை தெளித்து, சத்தம் போடாமல் ஒழுங்காக இருக்கும்படி கூறினோம்.
சைக்கோ போல் சுற்றி வந்த அவர் ஆவேசமாக பேசியதுடன் உறவினர்களை அடிக்கவும் போவார். வாயில் வந்தபடி திட்டினார். இந்த நிலையில் எனது கணவர் மாணவி ராஜலட்சுமியை கொலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த பின்பு தான் எனக்கு இது பற்றி தெரியும். இதனால் அதிர்ச்சியில் உறைந்த நானும், எனது கணவரின் தம்பியும் சேர்ந்து தினேஷ்குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






