என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் கொடூரம்- பள்ளி கழிவறையில் 9-ம் மாணவன் படுகொலை
Byமாலை மலர்22 Jun 2018 11:36 AM GMT (Updated: 22 Jun 2018 11:36 AM GMT)
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #StudentMurdered #GujaratStudentKilled
வதோதரா:
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் பரன்போரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் இன்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவனது தலை மற்றும் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அருகில் ஒரு கத்தியும் கிடந்தது. எனவே, மாணவனை யாரோ கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு வந்து மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மாணவனுக்கும் 10ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. எனவே, அந்த மாணவன் ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த மாணவன் தலைமறைவாகிவிட்டதால், அவனைத் தேடி வருகின்றனர்.
மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாணவன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும், பள்ளி முன்பு ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #StudentMurdered #GujaratStudentKilled
Next Story
×