பணகுடியில் சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

ராஜலிங்கம் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.பலத்த காயம் அடைந்த ராஜலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பணகுடியில் சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
Published on

பணகுடி:

பணகுடி அருகே உள்ள கோவில்விளை அண்ணாநகரை சேர்ந்தவர் பொன்னுதுரை. இவரது மகன் ராஜலிங்கம்(வயது 32). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

பணகுடி அருகே உள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர் கார்த்தி(25). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கார்த்தியும், ராஜலிங்கமும் காவல்கிணறு பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை கார்த்தி ஓட்டி வந்த நிலையில், பணகுடி நெருஞ்சிகாலனியில் நான்கு வழிச்சாலை அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் பின்னால் அமர்ந்திருந்த ராஜலிங்கம் தூக்கி வீசப்பட்டார். தலையில் அவருக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கார்த்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் உயிரிழந்த ராஜலிங்கம் உடலை அவர்கள் மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com