பணகுடியில் லேப்டாப் திருடிய 2 வாலிபர்கள் கைது

பணகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் தலைமை காவலர் லட்சுமி நாராயணன், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (24), வசந்தகுமார் (20) ஆகியோர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
பணகுடியில்  லேப்டாப் திருடிய 2 வாலிபர்கள் கைது
Published on

பணகுடி:

பணகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் தலைமை காவலர் லட்சுமி நாராயணன், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (24), வசந்தகுமார் (20) ஆகியோர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள்

பணகுடியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரது லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லேப்டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுத்து 24 மணி நேரத்திற்குள் ேலப்டாப்பை கண்டுபிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com