என் மலர்
நீங்கள் தேடியது "LapTop Theft"
- ஆந்திர வாலிபர் கைது
- வேலூர் ஜெயிலில் அடைப்பு
வேலூர்:
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து கேரளா மாநிலம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. இதில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பிரீத்தி மற்றும் சசிதரன் உள்ளிட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
காட்பாடி அருகே ரெயில் வந்த போது டாக்டர் ப்ரீத்தி வைத்திருந்த செல்போன் உள்ளிட்ட பைகள் மற்றும் சசிதரன் உள்ளிட்ட 5 பேரின் செல்போன்கள் ஒரு லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் கெங்கரெட்டி பாளையத்தை சேர்ந்த ஹரிஷ் பாபு (வயது 29) என்பவர் நேற்று காட்பாடி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர் அப்போது அவரிடம் பல்வேறு ரெயில்களில் செல்லக்கூடிய ரெயில் டிக்கெட் இருந்தன.
இது பற்றி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் டாக்டர் உள்பட பயணிகளிடம் திருடியது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 6 செல்போன்கள் ஒரு லேப்டாப் மற்றும் பெண் டாக்டரின் பை பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 27 ஆயிரத்து மதிப்பிலான பொருட்கள் இருந்தன.
ஹரிஷ் பாபு கடந்த ஜனவரி மாதம் முதல் ரெயில்களில் திருடுவதை தொடங்கியுள்ளார். திருமணம் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு அவர் ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணம் செய்து சக பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
போலீசார் ஹரிஷ் பாபுவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- பணகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் தலைமை காவலர் லட்சுமி நாராயணன், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (24), வசந்தகுமார் (20) ஆகியோர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
பணகுடி:
பணகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் தலைமை காவலர் லட்சுமி நாராயணன், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (24), வசந்தகுமார் (20) ஆகியோர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள்
பணகுடியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரது லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லேப்டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுத்து 24 மணி நேரத்திற்குள் ேலப்டாப்பை கண்டுபிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருபவர்கள் விக்னேஷ், பாலாஜி. இவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி உள்ளனர்.
கடந்த 18-ந் தேதி இவர்களது விடுதி அறையில் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன் திருடு போனது. இது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் விக்னேஷ் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் அவரது லேப்டாப் பர்மா பஜார் அருகே உள்ளதாக தகவல் வந்தது. இது பற்றி அவர் வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.
அப்போது ஒரு வாலிபர் லேப்டாப்பை விற்க முயன்றார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் அமைந்தகரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிய வந்தது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வாட் பாயாக ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்குச் செல்லாமல் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவரிடமிருந்து மூன்று லேப்டாப் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். #Robbery