ஓடும் பஸ்சில் ஓய்வு டி.எஸ்.பி.யிடம் மடிக்கணினி திருட்டு

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் கஜேந்திரவரதன் (65), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யான இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தருமபுரி செல்வதற்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.அதிகாலை 2.30 மணிக்கு 5 ரோடு அருகே பஸ் வந்த போது அவரது மடிக்கணினி இருந்த பை மாயமானது தெரிய வந்தது.
ஓடும் பஸ்சில் ஓய்வு டி.எஸ்.பி.யிடம்  மடிக்கணினி திருட்டு
Published on

சேலம் :

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் கஜேந்திரவரதன் (65), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யான இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் தருமபுரி செல்வதற்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து டவுன் பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து டவுன் பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.அதிகாலை 2.30 மணிக்கு 5 ரோடு அருகே பஸ் வந்த போது அவரது மடிக்கணினி இருந்த பை மாயமானது தெரிய வந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் திருடியதை அறிந்த அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com