search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stanley Hospital In Chennai"

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரி விடுதியில் லேப்-டாப் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். #Robbery
    ராயபுரம்:

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருபவர்கள் விக்னேஷ், பாலாஜி. இவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி உள்ளனர்.

    கடந்த 18-ந் தேதி இவர்களது விடுதி அறையில் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன் திருடு போனது. இது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் விக்னேஷ் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் அவரது லேப்டாப் பர்மா பஜார் அருகே உள்ளதாக தகவல் வந்தது. இது பற்றி அவர் வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் லேப்டாப்பை விற்க முயன்றார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் அமைந்தகரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிய வந்தது.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வாட் பாயாக ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்குச் செல்லாமல் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இவரிடமிருந்து மூன்று லேப்டாப் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். #Robbery


    ×