என் மலர்

  நீங்கள் தேடியது "Foreign currency"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனக்கு சொந்தமான வீட்டில் ஜார்ஜ்துரை தனியாக வசித்து வருகிறார்.
  • வீட்டின் கதவு திறக்கப்பட்டு வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது.

  பணகுடி:

  பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் புதுக்கோட்டை தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ்துரை(வயது 79). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் ஜெரால்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

  கடந்த 11-ந்தேதி ஜார்ஜ்துரை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றார். நேற்று மாலை ஊருக்கு திரும்பிய அவர் வீட்டுக்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு கள்ளச்சாவி போட்டு திறக்கப்பட்டு இருந்தது.

  அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த வெளிநாட்டு பணம் ரூ.10 ஆயிரம், விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஜார்ஜ்துரை அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி, திண்டுக்கல்லை சேர்ந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
  • வெளிநாட்டு பணத்தை கடத்தியவர்களிடம் மேல் விசாரணை நடத்தப்படுகிறது.

  சென்னையில் இருந்து இலங்கை செல்ல இருந்த பயணிகள் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

  சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், சென்னையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு செல்ல இருந்த, திருச்சியைச் சேர்ந்த லட்சுமி கந்தசாமி, கனகவள்ளி சுப்பிரமணி மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாரியம்மாள் சுடலைமுத்து ஆகிய மூன்று பெண் பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர்

  இதில், மூன்று பயணிகளும் தலா 100 அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.34.76லட்சம் ஆகும். இது தொடர்பாக, மேல்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் கே.ஆர்.உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேங்கி கிடக்கும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் திணறி வருகிறது. #Tirupati #TirupatiTemple

  திருமலை:

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்கள், தங்கம், வெள்ளிப்பொருட்கள், செல்போன் உள்பட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்திய ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கோவிலுக்குப் பின் பக்கமுள்ள, ‘‘பரகாமணி சேவா குலு’’ அறையில் உடனுக்குடன் எண்ணப்படுகின்றன.

  இந்தியா மற்றும் வெளிநாட்டு சில்லரை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை மூட்டைகளில் கட்டி, வாகனங்களில் திருமலையில் இருந்து திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு, இந்திய சில்லரை நாணயங்கள் எண்ணப்படுகின்றன. வெளிநாட்டு சில்லரை நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் எண்ணப்படாமல் தேங்கி கிடக்கின்றன. அந்த நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் கோணிப்பைகளில் மூட்டை மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

  தேங்கி கிடக்கும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை மாற்ற, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. மொத்த வெளிநாட்டுப் பணத்தில் 52 டன் நாணயங்களாகவே உள்ளன. அதில் மலேசிய நாட்டு சில்லரை நாணயம் மட்டும் 40 டன்னும், இதர வெளிநாட்டு நாணயங்கள் 12 டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

  2003-ம் ஆண்டு எடை கணக்கில் கொடுத்து, வெளிநாட்டுப் பணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வெளிநாட்டுப் பணத்தை மூட்டைகளில் கட்டி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெளிநாட்டுப் பணம் எடை குறைவாக மூட்டைகளில் கட்டி அனுப்பப்பட்டதாக புகார்கள் எழுந்ததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

  அதைத்தொடர்ந்து 2012-ம் ஆண்டு இ.டெண்டர் மூலமாக மலேசிய நாட்டு நாணயங்கள், பணத்தை மட்டும் இந்திய ரூபாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடைமுறையும் பயனளிக்கவில்லை. பின்னர் ஒரு தனியார் வங்கி மூலம் வெளிநாட்டுப் பணத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.

  மேலும் மீண்டும் இரு தனியார் வங்கிகள், ஒரு தனியார் நிதி நிறுவனம் ஆகியவை மூலம் வெளிநாட்டுப் பணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த இரு தனியார் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனமும் குறைந்த மதிப்பில் டெண்டர் கேட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. வெளிநாட்டுப் பணத்தை எப்படியாவது மாற்றி விட வேண்டும் என முனைப்பில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது. எனினும் எந்த முயற்சிகளும் பயனளிக்காததால், வெளிநாட்டுப் பணத்தை மாற்ற திணறி வருகிறது.

  அதன் ஒரு வழியாக வெளிநாடுகளில் வசித்து வரும் தெலுங்கு பேசும் மக்களை சந்தித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்கள் மூலமாகவே சம்பந்தப்பட்ட நாடுகளின் பணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அத்துடன் சென்ட்ரல் பேங்க் ஆப் மலேசியா நிறுவனம் மூலமும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை நாணயங்களை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tirupati #TirupatiTemple

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #TrichyAirport #ForeignCurrency #Seized
  திருச்சி:

  திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்றிரவு தனியார் விமானம் புறப்பட இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

  அப்போது ரியாஸ் அகமது என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவரிடம் இந்திய ரூபாயில் 17.45 லட்சம் மதிப்பில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  மேலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த நாசர் என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவர் ரூ.2.91 லட்சம் மதிப்பிலான 93 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பணம், தங்கம் கடத்தல் தொடர்பாக ரியாஸ் அகமது, நாசர் ஆகியோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம், வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடத்தலுக்கு விமான நிலைய அதிகாரிகளே உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.

  இதையடுத்து அதிகாரிகள் சிலரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையம் வழியாக கடத்தல் சம்பவங்கள் குறைந் திருந்தது.

  தற்போது மீண்டும் திருச்சி விமான நிலையம் வழியாக பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம் கடத்தி வருவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் ரூ.4 கோடி மதிப்பில் பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலை தடுக்க அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  #TrichyAirport #ForeignCurrency #Seized  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ரூ. 92 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது.
  ஆலந்தூர்:

  சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்ல வந்த சிவகங்கையை சேர்ந்த பெருமாள் என்பவரின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.87 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  இதேபோல் இலங்கை செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கஜனாவ் என்வரிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான யூரோ கரன்சி சிக்கியது.

  2 பேரிடமும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் ஹவாலா பணமா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
  ×