என் மலர்
செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 92 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ரூ. 92 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்ல வந்த சிவகங்கையை சேர்ந்த பெருமாள் என்பவரின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.87 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இலங்கை செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கஜனாவ் என்வரிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான யூரோ கரன்சி சிக்கியது.
2 பேரிடமும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் ஹவாலா பணமா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story