என் மலர்
நீங்கள் தேடியது "வெளிநாட்டு பணம்"
- 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணி கருவூலத்தில் செலுத்துவது வழக்கம்.
- 3 உண்டியல்களையும் திறந்து காணிக்கையை எண்ணும் பணியை தொடங்கினர்.
திருப்பூர் :
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே மத்தியில் அமைந்துள்ளது வீரராகவப் பெருமாள் கோவில். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையை செலுத்தி செல்கின்றனர்.
அதனை 3 மாதங்களுக்கு ஒரு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் திறந்து உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணி கருவூலத்தில் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் 3 உண்டியல்களையும் திறந்து காணிக்கையை எண்ணும் பணியை தொடங்கினர். அப்போது உண்டியலில் வெளிநாட்டு கரன்சிகளும், கேரளா லாட்டரியும் இருந்தன. அதனை கண்டு அதிகாரிகள் வியப்பு அடைந்தனர். கண்காணிப்பு கேமரா உதவியுடன் உண்டியல் பணம் எண்ணும் பணியை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு மலேசிய தலை நகர் கோலாலம்பூருக்கு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பெரம்பலூரை சேர்ந்த பெரியசாமி என்பவரின் உடைமைகளை சோதனை செய்யும் போது, அவரது டிராவல் பேக்கில் 6265 யூரோ, 2579 மலேசியன் ரிங்கிட், 430 சிங்கப்பூர் டாலர், 2000 ரியால், 2760 கிராம் திராம்ஸ் ஆகிய வெளிநாட்டு பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வெளிநாட்டு பணத்திற்கான இந்திய ரூபாயின் மதிப்புரூ.6.43 லட்சம் ஆகும். இது தொடர்பாக பெரியசாமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று திருவாரூரை சேர்ந்த பயணி குமார் , வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் இன்று மற்றொரு பயணியிடம் ரூ.6.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TrichyAirport
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுக்க மத்திய வான் நுண்ணறிவு சுங்கப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது திருவாரூரை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை போட்டனர். இதில் அவர் உடலில் மறைத்து 13,800 அமெரிக்க டாலர், 9,300 யூரோ, 1,150 சிங்கப்பூர் டாலர் ஆகியவற்றை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வெளிநாட்டு பணத்தின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.17 லட்சத்து 17 ஆயிரத்து 500 என அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நேரமாக இருப்பதால் வெளி நாடுகளில் இருந்து அதிக அளவில் பணம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் விமான நிலையத்தில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. #TrichyAirport
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்றிரவு தனியார் விமானம் புறப்பட இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ரியாஸ் அகமது என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவரிடம் இந்திய ரூபாயில் 17.45 லட்சம் மதிப்பில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த நாசர் என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவர் ரூ.2.91 லட்சம் மதிப்பிலான 93 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பணம், தங்கம் கடத்தல் தொடர்பாக ரியாஸ் அகமது, நாசர் ஆகியோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம், வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடத்தலுக்கு விமான நிலைய அதிகாரிகளே உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் சிலரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையம் வழியாக கடத்தல் சம்பவங்கள் குறைந் திருந்தது.
தற்போது மீண்டும் திருச்சி விமான நிலையம் வழியாக பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம் கடத்தி வருவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் ரூ.4 கோடி மதிப்பில் பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலை தடுக்க அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். #TrichyAirport #ForeignCurrency #Seized
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்ல வந்த சிவகங்கையை சேர்ந்த பெருமாள் என்பவரின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.87 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இலங்கை செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கஜனாவ் என்வரிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான யூரோ கரன்சி சிக்கியது.
2 பேரிடமும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் ஹவாலா பணமா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் போக்குவரத்துடன், சரக்கு போக்குவரத்தும் உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுபோல் தங்க நகை கடத்தல் உள்ளிட்ட செயல்களும் அதிரிகரித்துள்ளது.
ஆனாலும் சுங்கத்துறை அதிகாரிகள் நவீன ஸ்கேனிங் உள்ளிட்ட கருவிகள் மூலம் தங்கம் கடத்தலை தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு விமான பயணியிடம் வெளி நாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இதில் செல்வதற்காக வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை போட்டனர்.
அப்போது சிங்கப்பூர் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த புதுக்கோட்டையை சேர்ந்த தனபால் என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவரது பைக்குள் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பையில் 200 அமெரிக்க டாலர்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 41 ஆயிரத்து 600 ஆகும். இந்த பணம் தனபாலுக்கு எப்படி கிடைத்தது, யார் மூலம் பெற்றார், அந்த பணத்தை சிங்கப்பூருக்கு யாருக்காக எடுத்து சென்றார்? என தனபாலிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை தங்கம், போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






