பணகுடி அருகே கல்குவாரியில் இறந்து கிடந்த மிளா

பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை புத்தேரி காட்டுப்பகுதியில் உபயோகத்தில் இல்லாத கல்குவாரி ஒன்று உள்ளதுயாரேனும் மிளாவை கொன்றிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்து கிடந்த மிளா.
இறந்து கிடந்த மிளா.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை புத்தேரி காட்டுப்பகுதியில் உபயோகத்தில் இல்லாத கல்குவாரி ஒன்று உள்ளது. இதன் கரையில் மிளா ஒன்று இறந்து கிடந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்து கூந்தன்குளம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மிளாவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிளாவின் கழுத்து பகுதியில் காயம் இருக்கிறது. இதனால் தெற்கு கருங்குளம் பகுதி மலையில் இருந்து மேய்ச்சலுக்காக அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றபோது மிளாக்கள் சண்டையிட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த பகுதியில் விவசாய நிலங்களுக்குள் மிளா அடிக்கடி புகுந்து நாசப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இதனால் யாரேனும் மிளாவை கொன்றிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com