என் மலர்
உள்ளூர் செய்திகள்

குப்பை கிடங்கில் திடீர் 'தீ'
- காற்றின் வேகத்தால் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது.
- தீயை கட்டுப்படுத்த முடியாததால் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஈசானிய தெருவில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை அங்கு தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரவு திடீரென குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
காற்றின் வேகத்தால் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சிய ளித்தது.
தீயை கட்டுப்படுத்த முடியாததால் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
Next Story






