search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "info"

    • தன்னுடன் வேலைபார்க்கும் அதே பகுதியைச்சேர்ந்த தனுஷ்யா என்பவருடன் வேலைக்கு செல்வது வழக்கம்.
    • இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சத்தியவாணியை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நாகை மாவட்டம் திட்டச்சேரி வாணியத்தெருவை ச்சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சத்தியவாணி (வயது24) என்பவர், காரைக்கால் நேரு வீதியில் உள்ள பிரபல பர்னிச்சர் கடையில் கடந்த 4 மாதங்களாக வேலை செய்து வருகிறார்.

    இவர் வழக்கமாக தன்னுடன் வேலைபார்க்கும் அதே பகுதியைச்சேர்ந்த தனுஷ்யா என்பவருடன் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த 4-ந் தேதி வழக்கம் போல், இருவரும் வேலைக்கு சென்றனர். அப்போது, அதே கடையில் வேலை செய்யும் ஓடுதுறையைச்சேர்ந்த சினேகா என்பவரையும் ஸ்கூட்டியில் ஏற்றிகொண்டு கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    மாலை 5 மணிக்கு, தந்தை சங்கர் சத்தியவாணிக்கு போன் செய்தபோது, போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. தொடர்ந்து, சங்கர் பல இடங்களில் தேடியும் சத்தியவாணி குறித்து தகவல் தெரியாததால், காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சத்தியவாணியை தேடி வருகின்றனர்.

    • காவேரி கரை அழகிரி மண்டபத்தில் 60 வயது மதிக்கதக்க முதியவர் பிணம் கிடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே ஆடுதுறையை அடுத்த சூரியனார் கோவில் காவேரி கரை அழகிரி மண்டபத்தில் 60 வயது மதிக்கதக்க முதியவர் பிணம் கிடப்பதாக திருப்பனந்தாள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நெற்குப்பையில் மலைப்பாம்பு பிடிபட்டது
    • தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள 5-வது வார்டில் பொன்னமராவதி- திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள சாத்தப்பா செட்டியார் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 10 அடி நீளம் கொண்ட வெங்கனத்தி வகையைச் சேர்ந்த மலை பாம்பு ஒன்று வீட்டின் பின்புறம் இரை தேடி வந்தது.

    இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தீயணைப்பு துறையினர் உடனடியாக வரவில்லை. இதைத்தொடர்ந்து நெற்குப்பை பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர் சேர்க்கப்பன் தூய்மை பணியாளர்களை அழைத்தார். அதன்பேரில் வந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு தலைமையிலான தூய்மைப்பணியாளர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வேலங்குடி வனப் பகுதியில் விட்டனர்.

    • உலக செஸ் ஒலிம்பியாட் ஜோதி 26-ந்தேதி வருகை தருவதாக கலெக்டர் கூறினார்.
    • மக்கள் அனைவரும் இந்த செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆதரவு தர வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:-

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந்தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 26-ந்தேதி மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களுக்கும் இந்த ஜோதி கொண்டு செல்லப்பட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் முன்னோடியாக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து பொது இடங்களில் எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகின்றனரோ அங்கெல்லாம் செஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அனைத்து மக்களும் இந்த செஸ் ஒலிம்பியாட்டை கொண்டாட வேண்டும். செஸ் விளையாட்டு பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் இந்த செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஸ்டிக்கர்களை ஒட்டி கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    ×