என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலெக்டர்"
- நிலத்தை முழுமையாக என்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.
- போலீசார் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமத்தை சேர்ந்த பிச்சையப்பன் மனைவி மணியம்மாள் (வயது 75), அவரது மகன் சரபோஜி (40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி (38) ஆகிய 3 பேரும் நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தங்களது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதனை பார்த்த போலீசார் உடனடியாக ஓடி சென்று அவர்களிடமிருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
நாங்கள் எங்கள் ஊரில் 2.50 ஏக்கரில் நெற்பயிர் செய்துள்ளோம். விவசாயத்தை நம்பியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் எனது இறந்த மகனின் மனைவி அதாவது எனது மருமகள் விளைநிலத்தில் எனக்கும் பங்கு உண்டு எனக்கூறி 30 பேருடன் வந்து பயிரிட்ட நெற்பயிர்களை பிடுங்கி சேதப்படுத்தினார்.
மேலும் நிலத்தை முழுமையாக என்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.
இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். நாங்கள் உயிர் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட மருமகள் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தில் நெற்பயிர் அறுவடை செய்ய எந்த இடையூறும் ஏற்படாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து போலீசார் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குமரி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அவர்களிடம் கலெக்டர் ஸ்ரீதர் மனுக்களை பெற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடுக்க ப்பட்ட மனுவில், மர்மமாக இறந்த குலசேகரம் கோட்டூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுந்தர்ராஜ் மரணம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.
செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் மக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் மரப்பாலம் மலைப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
- ராமநாதபுரத்தில் கிராம மக்களை சந்தித்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.
- இப்பகுதிக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணியமர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம், உச்சிநத்தம் மற்றும் வி.சேதுராஜபுரம் ஊராட்சி களில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கலெக்டர், பொதுமக்களிடம் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
மேலும் மழைக்காலமாக உள்ளதால் தங்கள் பகுதிகளில் உள்ள கால்வாய் களில் தண்ணீர் தேங்காமலும் தங்கள் பகுதிகளில் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீரை கொடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.
மாவட்டத்தின் கடைசி பகுதியாக இருக்கக்கூடிய இந்த ஊராட்சிகளில் அவ்வப்போது அரசு துறை அலுவலர்கள் மக்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்கள். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான திட்டங்களை அரசு அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெற வேண்டும். மேலும் இப்பகு திக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணிய மர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில் கடலாடி வட்டாட்சியர்ரெங்கராஜ், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, உச்சி நத்தம் ஊராட்சி மன்றத்த லைவர் பாமா ருக்மணி, சேதுராஜபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜமுனா ஆகியோர் உடனிருந்தனர்.
- 2-வது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18 கடைகள் அதிரடியாக மூடப்பட்டது.
- குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்களுடன் உணவு பாதுகாப்புத்துறை திருவள்ளுர் மாவட்ட நியமன அலுவலர் கலந்தாய்வு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து திருவள்ளுர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த கூட்டாய்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வேனா கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது 32 கடைகளில் சுமார் 273 கிலோ தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
மேலும் ஏற்கனவே விற்பனை செய்து அபராதம் விதித்த போதும் 2-வது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18 கடைகள் அதிரடியாக மூடப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் பான்மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதை கண்டறிந்தால் உடனடியாக நுகர்வோர் குறைதீர்ப்பு செயலியான Tnfood safety consumer app மற்றும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல், https://foscos.fssai.gov.in என்ற இணைய தளம் மற்றும் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்கள் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்
மாவட்டம் முழுவதும் அதிலும் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் குட்கா, புகையிலையால் ஏற்படும் தீங்குகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பள்ளிகளில் தொடர்பு ஆசிரியர் ஒருவரை நியமித்து மாணவர்களின் பயன்பாட்டை கண்டறிந்து பள்ளிக்கு அருகில் புகையிலை விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், மற்றும் பயணவழி உணவகங்களில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமாக உணவு வழங்குதலை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
- பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.15 கோடிசெலவில் நடைபெற்று வரும் புரனமைப்பு பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் மாமல்லபுரம் பஸ் நிலையம், கடற்கரை சாலை மற்றும் கடலோர பகுதிகளை பார்வையிட்டு தொடங்க இருக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உணவுத்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பல இடங்களில் அடாவடியாக வாகனங்களை நிறுத்தி வசூலிப்பதாக புகார் எழுந்து உள்ளது. நுழைவு கட்டணம் வசூலிப்பதில் அடாவடி நடந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரனுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.
- பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
- ராம்மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவிநாசி:
]அவினாசி துலுக்கமுத்தூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், கிராமங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து தீர்வு காண தனிக்கவனம் செலுத்த வேண்டும். கடைக்கோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்றுசேர அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், இணையவழி இ-பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தாட்கோ சார்பில் கடனுதவி, விலையில்லா சலவைப்பெட்டிகள், தையல் எந்திரங்கள் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.87 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கலெக்டர் வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
முகாமில் திருப்பூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ராம்குமார், வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வரலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் திருக்குமரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், சமூக நல அதிகாரி ரஞ்சிதாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி குமாரராஜா, அவினாசி தாசில்தார் ராம்மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- தொலை பேசி எண் 04652 260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
நாகர்கோவில், நவ.22-
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு 2024- ம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8-ல் உலக முத லீட்டாளர் கள் மாநாட்டை நடத்த திட்ட மிட்டுள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டத் திற்கு ரூ.300 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. உலக முத லீட்டாளர்கள் மாநாட்டில் கன்னியாகுமரி மாவட் டத்திற்கு முதலீடு களை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்து நடை முறைப்படுத்த அனைத்து குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்புகள், தொழில் வணிக அமைப்புகள், கல்லூரி கூட்டமைப்பு அனைத்து நிறுவனங்கள், அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து உறுதி செய்வதற்குரிய வழிமுறை களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி ரூ.99 லட்சத்திற்கு மேலான இயந்திர தளவாட மதிப் புள்ள தொழிற் சாலைகள், பல்நோக்கு அரங்கங்கள், மேம்படுத்தப் பட்ட ஓட்டல்கள், வணிக கூடங்கள் அமைத்தல், முகமை தொழில், வணிக கூட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய அனைத்து வகைகளிலும் மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள் வணிக செயல் பாட்டாளர்கள் www.msmeonline.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். மாவட்ட தொழில் மையத் தில் புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதல்கள், உதவிகள், மானியங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 குறித்த அைனத்து விபரங்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள மாவட்ட தொழில் மையம் தொழிற்பேட்டை, கோணம், நாகர்கோவில் 4 அலுவலகத்தை நேரிேலா அல்லது தொலை பேசி எண் 04652 260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- காய்கறி, உணவு கழிவுகள் மூலம் பயோ கியாஸ் தயாரித்து உணவு சமைக்கும் பணியை சிவகங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக்கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு விறகு அடுப் பில் சத்துணவு சமைத்து வழங்கப்பட்டு வந்தது. அதன்மூலம் உண்டாகும் புகையால் சமையலர்கள், மாணவர்கள் பாதிப்புக்குள் ளாகி வந்தனர்.
இப்பிரச்சினையை போக்க ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ஏற்பாட்டில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் காய்கறி, உணவுக்கழிவுகளில் இருந்து தயாரிக்கும் பயோ கேஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் மாணவர்களுக்காக சத்துணவு சமைக்கப்பட உள்ளது.
நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக்கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ், ஊராட்சி செயலாளர் ஜான்சிராணி, பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
- மீன்வள தினத்தை முன்னிட்டு கடல்வாழ் உயிரின உணவு கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பூங்கா வில் உலக மீன்வள தினத்தை யொட்டி கடல் வாழ் உயிரினங்களின் உணவு கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உணவு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சி அரங்கில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து பல அறிய வகை மீன்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் இடம்பெற்றன. மாலை 4 மணிக்கு தொடங்கிய கண்காட்சி இரவு 8 மணிக்கு முடி வடைந்தது. இதில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
கண்காட்சி அரங்கில் நவீன மின்னணு திரை அமைத்து தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கும் அரசு நலத்திட்டங்கள் குறித்தும், மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்படும் வருமா னம் மற்றும் மீனவர்க ளுக்கான பயிற்சி மற்றும் பேரிடர் காலங்களில் பாது காப்புடன் சென்று வருவ தற்கான வழிகாட்டுதல் குறித்த குறும்படங்கள் திரை யிடப்பட்டது.
குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தது. உணவு கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா. உதவி இயக்குநர்கள் சிவகுமார் (மண்டபம்), அப்துல்காதர் ஜெய்லானி (ராமேசுவரம்), மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இந்த குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 124 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 55 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 82 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், தையல் இயந்திரம் கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 144 ஆக மொத்தம் 623 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடை உபகரணத்தை 14 நபர்களுக்கு ரூ.75,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 1 பயனாளிக்கு தையல் எந்திரத்தையும் வழங்கினார்.இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.