என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் ரூ.48 கோடி மதிப்பில் சிகிச்சை - கலெக்டர் தகவல்
  X

  கோப்புபடம்.

  மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் ரூ.48 கோடி மதிப்பில் சிகிச்சை - கலெக்டர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • 5,29,428 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

  திருப்பூர் :

  முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 17,094 நபா்களுக்கு ரூ.48 கோடி மதிப்பீட்டில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

  தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது திருப்பூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இத்திட்டத்தின் மூலமாக 5,29,428 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 2021 ம் ஆண்டு மே 7 ந்தேதி முதல் 2022 ம் ஆண்டு அக்டோபா் 11 ந் தேதி வரையில் 17,094 நபா்களுக்கு ரூ.48 கோடி மதிப்பீட்டில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை எடுக்காதவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள்) ஆகிய அவணங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 3 ல் சமா்ப்பித்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×