search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய அரசின்  தர நிலைகள் பற்றிய  விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.

    இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • சிவகங்கையில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால் உற்பத்தி யாளர்களின் தரமும் மேம்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகத்தின் சார்பில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்காக தரப்படுத்தப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் கொள்முதலின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால் உற்பத்தி யாளர்களின் தரமும் மேம்படுகிறது.

    இதில் பங்கேற்பாளர் களும் தங்கள் கொள்முதல் டெண்டர்களில் இந்திய தர நிர்ணயத்தை இணைத்து கொள்வதன் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளனர்.

    தயாரிப்புக்களை அடையாளம் காண புகார் தீர்க்கும் நெறிமுறைகள் போன்றவைகள் குறித்தும், தரமான பொருட்களை வாங்குவதற்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது குறித்தும், தனிப்பட்ட துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ. 9001 போன்ற மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களுடன் செயல்படுத்தப்படுவது குறித்தும் எடுத்துரைக்க ப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணித்துறை, கல்வித்துறை, தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம், மாநில நெடுஞ்சாலைகள் துறை , சுகாதாரத்துறை, மாவட்ட வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவு சங்கம், மாவட்ட சுற்றுலா, சுய உதவிக்குழு, சட்டம் வல்லுநர்கள் போன்ற சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக விழிப்புணவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மதுரை கிளை அலுவலக தலைமை விருந்தினர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×