search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நலிவடைந்த மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்
    X

    நலிவடைந்த மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நலிவடைந்த மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுர மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டமாக ஆக மத்திய அரசால் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இ்ந்த மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியை, பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டைதாரா்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் மூலமாக அங்கன்வாடி குழந்தைகளுக்கும் மற்றும் பிரதமரின் போஜன் மதிய உணவுத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவா்களுக்கும் வழங்க அரசாணை வரப்பெற்றுள்ளது.

    இந்த ஆண்டு மார்ச் 2022 முதல் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவா்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மூலம் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டைதாரா்களுக்கும் அடுத்தாண்டு மார்ச்் வரை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசால் சாதாரண நலிவடைந்த மக்களின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தவும் பொது சுகாதார நலன்களை கருத்தில் கொண்டு உணவுப்பொருள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சாதாரண நலிவடைந்த மக்கள் இந்த அரிசியை பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×