என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்த காட்சி.
திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின் போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பராமரிப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, விவரங்களை சரிபார்த்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பராமரிப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, விவரங்களை சரிபார்த்தார்.
நில அளவை பதிவேடு, வழக்குகள் பதிவேடு, பொதுமக்களின் கோரிக்கைகள் விவர பதிவேடு அலுவலர்கள், பணியாளர்களின் வருகை பதிவேடு, தன்பதிவேடு, வழங்கல் துறை பதிவேடு உள்ளிட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா, ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் தங்கம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






