search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 9 டன் விளைபொருட்கள்    விற்பனை
    X

    கோப்புபடம். 

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 9 டன் விளைபொருட்கள் விற்பனை

    • வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
    • சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் எள், தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    ெவள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பொருள்களை கொள்முதல் செய்கின்றனா்.

    இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் எள், தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், 21 மூட்டை எள், 61 மூட்டைகள் கொப்பரை, 11 ஆயிரம் தேங்காய் என மொத்தம் 9 டன் விளைபொருள்களை வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். இதன் மூலம் ரூ.4.39 லட்சம் வா்த்தகம் நடைபெற்றுள்ளதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

    Next Story
    ×