search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauldron sales"

    • ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது
    • ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு 2,004 கிலோ எடையிலான தேங்காய் வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 23.55.

    கொப்பரை 1,544 கிலோ வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 60.10 முதல் ரூ. 81.55 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 80.20.ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.67 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளை சோ்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.
    • ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா். 

    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.09 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கட்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 4 விவசாயிகள் 31 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை1,444 கிலோ.

    காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளை சோ்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.81க்கும், குறைந்தபட்சமாக ரூ.63க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.09 லட்சம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா். 

    ×