search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  3.50 டன் தேங்காய்,கொப்பரை விற்பனை
    X

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3.50 டன் தேங்காய்,கொப்பரை விற்பனை

    • ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது
    • ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு 2,004 கிலோ எடையிலான தேங்காய் வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 23.55.

    கொப்பரை 1,544 கிலோ வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 60.10 முதல் ரூ. 81.55 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 80.20.ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.67 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    Next Story
    ×