என் மலர்
நீங்கள் தேடியது "Cotton"
- பருத்தி வரத்து குறைவு மற்றும் நூலுக்கான தேவை அதிகரிப்பை அடுத்து நூல் விலை உயர்வு
- ரூ.220 முதல் ரூ.380 வரை விற்பனையாகி வந்த நூலின் விலை அனைத்து ரகங்களிலும் ரூ.3 அதிகரிப்பு
திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.178, 16-ம் நம்பர் ரூ.188, 20-ம் நம்பர் ரூ.246, 24-ம் நம்பர் ரூ.258, 30-ம் நம்பர் ரூ.268, 34-ம் நம்பர் ரூ.286, 40-ம் நம்பர் ரூ.306, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.243, 24-ம் நம்பர் ரூ. 253, 30-ம் நம்பர் ரூ.263, 34-ம் நம்பர் ரூ. 276, 40-ம் நம்பர் ரூ.296-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நூல் விலை ஏற்றம் இல்லாமல் சீராக இருந்தது. இந்நிலையில் திடீரென நூல் விலை ரூ.3 உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் அதிர்ச்சிடைந்துள்ளனர்.
- பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
- நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபாவளி பண்டிகை ஆர்டர் பரபரப்பாக மாறியிருந்தது. வழக்கம் போல் தீபாவளிக்கு பின் பனியன் ஆர்டர்கள் மந்தமாகியது.
அதன்பின் தைப்பொங்கல் பண்டிகையில் இருந்து மாதாந்திர விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கின. நவம்பர் -டிசம்பர் மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாத இறுதியில் இருந்து தான், பின்னலாடை நிறுவனங்களின் இயக்கம் சீராகியுள்ளது.
திருப்பூரில் தயாரிக்கப்படும் பருத்தி நூலிழை டி-சர்ட்டுகள், கோடைகாலத்துக்கு ஏற்றவை. அத்துடன், பெண்களுக்கான இரவு நேர ஆடைகளும் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. அதன்படி நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் விசாரணை சாதகமாக மாறியுள்ளது. வடமாநிலங்களில் போட்டியாக உற்பத்தி நிலையங்கள் துவங்கினாலும் கோடை கால பயன்பாட்டுக்கான பருத்தி பின்னலாடைகள் திருப்பூரில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் இருந்து ஆர்டர் வர தொடங்கி உள்ளது.
இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
தீபாவளிக்கு பின் பொங்கல் பண்டிகை வரை திருப்பூர் ஆடை விற்பனை மிக மந்தமாக இருந்தது. அதன்பின் அன்றாட விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கியது. கோடை தொடங்கி விட்டதால் வடமாநிலங்களில் இருந்து தற்போது தான் ஆர்டர் வந்துள்ளது. ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளை, அனுப்பி வைக்கும் பணி வேகமெடுத்துள்ளது.
கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் பின்னல் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர். அதற்காக பின்னல் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை வேகமெடுத்து வருகிறது. ஜூன் மாதம் பள்ளி சீருடை ஆர்டர் துவங்கும் வரை கோடைகால ஆர்டர்கள் கை கொடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரம்ஜான் பண்டிகைக்காக ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் வழக்கமான வர்த்தகர்கள் வந்து கொள்முதல் செய்து சென்றுள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொண்டாடப்படும் யுகாதி பண்டிகைக்காக, அம்மாநில வியாபாரிகளும் மொத்த கொள்முதல் செய்து சென்றனர். கோடை காலம் தொடங்கிவிட்டதால் திருப்பூரில் தயாரிக்கப்படும் 'பைன்' 'டி-சர்ட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது என ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
- ஏலத்துக்கு 1,121 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
- மட்டரக (கொட்டு ரக) பருத்தி குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது.
அவினாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 31 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,121 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஆா்.சி.ஹெச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,500 முதல் ரூ.9,999 வரையிலும், மட்டரக (கொட்டு ரக) பருத்தி குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.31 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
- விவசாயிகள் 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
- ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது.
மூலனூர்:
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு திண்டுக்கல், இடையகோட்டை, வெள்ளாளபட்டி, போத்துராவுத்தன்பட்டி, மஞ்சக்காம்பட்டி, கம்பளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 விவசாயிகள் தங்களுடைய 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 11,603 கிலோ.
முத்தூா், காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 7 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.64.44 முதல் ரூ. 69.99 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 66.59. கடந்த வார சராசரி விலை ரூ.70.02. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் பல கலந்து கொண்டனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9,999 -க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,150 -க்கும், சராசரி விலையாக ரூ .8,950 -க்கும் விற்பனையானது.பருத்தியின் மொத்த அளவு 3,039 மூட்டைகள், குவிண்டால் 1023.04. இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 97 ஆயிரத்து 133. இந்த மறைமுக ஏலத்தில் 14 வியாபாரிகள் பங்கேற்றனர். இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
- குவின்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
- ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ .49 லட்சத்து 44 ஆயிரம்.
அவினாசி :
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு புளியம்பட்டி, அன்னூர்,சேவூர், பென்னாகரம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1918 முட்டை பருத்தி வந்தது.
இதில் ஆர்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் மட்டரகப் பருத்தி குவின்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ .49 லட்சத்து 44 ஆயிரம். இந்த தகவலை சங்க மேலாண்மை இயக்குனர் மோசஸ் ரத்தினம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
- மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை நடைபெற்றது.
- 259 விவசாயிகள் தங்களுடைய 2,572 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
மூலனூர் :
மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 73 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 259 விவசாயிகள் தங்களுடைய 2,572 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 854 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 13 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 7,550 முதல் ரூ. 9,819 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,880. கடந்த வார சராசரி விலை ரூ. 8,950. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 73 லட்சம்.
விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
- ஒரு குவிண்டால் ரூ. 7,850 முதல் ரூ. 10,319 வரை விற்பனையானது.
- 254 விவசாயிகள் தங்களுடைய 2,142 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
மூலனூர்:
மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 63 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 254 விவசாயிகள் தங்களுடைய 2,142 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
மொத்த வரத்து 730 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 13 வணிகா்கள் இதை வாங்குவதற்கு வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 7,850 முதல் ரூ. 10,319 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,950. கடந்த வார சராசரி விலை ரூ.8,880. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 63 லட்சம். விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
- குடோனில் கடலை மூட்டையை இறக்கிவிட்டு பஸ் நிலையம் அருகில் கடலை கடைக்கு பணம் வாங்க வந்துள்ளார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நன்னிலம்:
கும்பகோணம் ஒட்டன் செட்டி தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 35). இவர் கடலை கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள குடோனில் கடலை மூட்டையை இறக்கிவிட்டு நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் கடலைக் கடைக்கு பணம் வாங்க வந்துள்ளார்.
அப்போது சரக்குவாகனத்தின் கதவை திறந்து இறங்கும் போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து சிவசங்கரன் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நன்னிலம் போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
- 560 கிலோ பஞ்சு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 450 கிலோவாக குறைந்துள்ளது.
திருப்பூர் :
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கருதப்படுவது ஜவுளித் தொழில். நாடு முழுவதும் ஜவுளித் தொழிலில் சுமார் 1.10 கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக, திருப்பூர் பஞ்சை நம்பியே இயங்கி வருகிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக பஞ்சு விலையில் காணப்படும் நிலையற்றத்தன்மை காரணமாக ஜவுளி மற்றும் அதைச்சார்ந்த அனைத்துத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில் ஜவுளித் தொழிலைக் காக்கும் வகையில் பஞ்சு இறக்குமதிக்கான வரி 11 சதவிகிதத்தை ரத்து செய்ய வேண்டும் தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ஜவுளித் தொழில் துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில், ''உலக அளவில் பருத்தி சாகுபடியில் முன்னணியில் இருந்த இந்தியாவில், படிப்படியாக பருத்தி சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி ஒரு ஹெக்டேர் பரப்பில் 560 கிலோ பஞ்சு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 450 கிலோவாக குறைந்துள்ளது. இதனால், பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழில் தேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட பஞ்சுகளை நாடவேண்டி உள்ளது.
இந்தியாவில் தற்போது ஒரு கேண்டி ரூ.67 ஆயிரமாக உள்ளது. வெளிநாட்டு பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.55 ஆயிரமாக உள்ளது. இரண்டுக்கும் இடையே 12 ஆயிரம் ரூபாய் விலை வித்தியாசம் உள்ளது. ஜிஎஸ்டி, மின்சாரக் கட்டணம், நூல் விலை உயர்வு ஆகிய காரணங்களால் திருப்பூரில் மட்டும் 70 சதவீதம் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூருக்கு வந்த ஆர்டர்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு செல்ல தொடங்கிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்தது போய், இன்று வங்கதேசத்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்தியாவில் 50 சதவீதம் நூற்பாலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. மேலும், திருப்பூரில் ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மூலப் பொருளான பஞ்சை நம்பியே ஜவுளித் தொழில் இயங்கிவரும் நிலையில் பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு எடுத்துக்கும் நிலைப்பாடு, ஜவுளித் தொழிலை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் நடவடிக்கையாக அமையும். இதன் மூலம் உள்நாட்டு வியாபாரிகளால் பஞ்சுப் பதுக்கல் அதிகரித்து, செயற்கை விலையேற்றம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
மத்திய அரசின் இந்த முடிவு, செயற்கை இழை ஆடை தயாரிப்பில் உள்ள பெருநிறுவனங்களுக்கு சாதகமாக அமையுமே தவிர, எங்களைப் போல், பருத்தியை நம்பி உள்ளோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி குறையும்போதுதான் இதன் பாதிப்பை மத்திய அரசு உணரும். ஜவுளித் தொழிலை நஷ்டத்தில் இருந்து மீட்க பஞ்சு இறக்குமதிக்கான வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 59 லட்சத்து 79ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 2741பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆா்.சி.எச். ரகப் பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 6,000 முதல் ரூ.7,000 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரகம்) பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 59லட்சத்து 79ஆயிரத்துக்கு பருத்தி விற்பனைநடைபெற்றது.
- 239 விவசாயிகள் தங்களுடைய 2,263 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்
- சராசரி விலை ரூ. 6,250. கடந்த வார சராசரி விலை ரூ. 7,450. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 48 லட்சம்.
மூலனூர்:
மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 48 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலம் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து239 விவசாயிகள் தங்களுடைய 2,263 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 788 குவிண்டால்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 14 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 5,500 முதல் ரூ. 7,419 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,250. கடந்த வார சராசரி விலை ரூ. 7,450. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 48 லட்சம்.
ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
- குரும்பலூரில் பருத்தி பஞ்சு அறுவடை செய்யபடுகிறது
- தொழிலாளர்கள் அறுவடை செய்யும் பணியில்மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர்-துறையூர் சாலையில் குரும்பலூரில் ஒரு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி செடிகளில் இருந்து பஞ்சு அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்