search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடோன்"

    • ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    • பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா?

    சென்னை:

    சென்னையில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் போதைப் பொருட்கள், கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களை கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசூல் ரகுமான், இப்ராகிம் மற்றும் சென்னையை சேர்ந்த மன்சூர் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெத்தாம்பெட்டமைன்' போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.

    சென்னை அருகே செங்குன்றம் பகுதியில், குடோன் ஒன்றில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 7 கிலோ மதிப்பிலான மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் அதன் பின்னணிகளை பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் தி.மு.க. பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது.

    இவர் அந்த கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ளார். இந்த கும்பல் ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் போதைப் பொருட்களை இங்கிருந்து பஸ் மற்றும் கார்களில் ராமநாதபுரத்துக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்தியதையும் கண்டுபிடித்துள்ளனர்.

    டெல்லியிலிருந்து போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் இருந்து மெத்தா பொட்டமைன் போதைப் பொருள்தான் சிக்கியது என்றும் இதையடுத்து சென்னையில் தற்போது பிடிபட்டுள்ள 3 பேருக்கும், ஜாபர்சாதிக்குக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது.

    திருவொற்றியூர்:

    மணலி ஆண்டார் குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் குடோன் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

    அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். குடோனில் உள்ளே இருக்கக்கூடிய மூலப் பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பற்றக்கூடியவை கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    தீயிலிருந்து வெளியேறிய புகை திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர் போன்ற சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. மணலி, எண்ணூர், மாதவரம் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 100-க் கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தண்ணீர், தீயணைப்பான் திரவம் போன்றவர்களைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தொடர்ந்து ரசாயன புகை சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளதால் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

    • குடோனில் பதுங்கி இருந்த 4 அடி நீள கண்ணாடி வீரியன் பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது.
    • ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் தனியார் டூ வீலர் ஷோரூம் உள்ளது.

    இந்த ஷோரூமின் ஒரு பகுதியில் உள்ள குடோனில் பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்.

    இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாண்டி யனுக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் அங்கு சென்ற பாண்டியன் குடோனில் பதுங்கி இருந்த நான்கடி நீளம் உள்ள கடுமையான விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்துடப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    • பெண் தலைமை காவலர் பவானி ஆகியோர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
    • 600 கிலோ அரிசி கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சின்ன கங்கனாங்குப்பம் பாண்டி சாலையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோ கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் ராஜேந்தி ரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை,போலீஸ்காரர்கள் முருகா னந்தம், ராஜா, பெண் தலைமை காவலர் பவானி ஆகி யோர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். இதில் சாக்கு முட்டைகள் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீ சார் சாக்கு மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. பின்னர் வாகன டிரைவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி னர். அவர் கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த செல்வம் என தெரியவந்தது. மேலும் 600 கிலோ அரிசி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகளை சோதனை செய்து குடோ னில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

    • குடோனின் மேல் உள்ள ஓட்டை பிரித்து இறங்கி அங்கு விட்டுச் சென்ற மதுபாட்டில்களை எடுத்து ஓசியில் குடித்து வந்து உள்ளனர்.
    • சுமார் 200-க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்களும் சிதறி கிடந்தன.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அடுத்த வரதாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை வளாகத்திற்குள் கடந்த 2013-ம் ஆண்டு போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.

    அப்போது கலால் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து போலியாக செயல்பட்டு வந்த மதுபான தொழிற்சாலை மற்றும் மதுபாட்டில்கள் இருந்த குடோனுக்கு சீல் வைத்தனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த போலி மதுபான குடோன் பூட்டியே கிடந்தது. அந்த குடோனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிதறிய பாட்டில்களை முறையாக பறிமுதல் செய்யாமல் அப்படியே விட்டு சென்றதாக தெரிகிறது.

    இதனை அறிந்த மது பிரியர்கள் நள்ளிரவில் குடோனின் மேல் உள்ள ஓட்டை பிரித்து இறங்கி அங்கு விட்டுச் சென்ற மதுபாட்டில்களை எடுத்து ஓசியில் குடித்து வந்து உள்ளனர்.

    நாட்கள் செல்ல செல்ல குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தினந்தோறும் ஏராளமான போதை ஆசாமிகள் இந்த குடோனுக்குள் புகுந்து மதுகுடித்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அதிக மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் வீட்டுக்கு வந்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட போலி மதுபான குடோனுக்குள் புகுந்து போதை வாலிபர்கள் மதுகுடித்து செல்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா மற்றும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சீல் வைத்த போலி மதுபான தொழிற்சாலைக்குள் சுவர் ஏறி குதித்து சென்றனர்.

    அப்போது அங்கு ஏராளமான காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடந்தது. மேலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்களும் சிதறி கிடந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்து அங்கேயே உடைத்து அழித்தனர். போதை வாலி பர்கள் எத்தனை நாட்களாக எவ்வளவு மதுபாட்டில்களை குடித்து காலி செய்தனர் என்று தெரியவில்லை. பணம் கொடுக்காமல் ஓசியில் தினந்தோறும் மதுகுடித்து ஜாலியாக இருந்து உள்ளனர். அவை போலி மது பானம் என்பதாலும் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேல் ஆவதாலும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதா என்றும் தெரியவில்லை.

    இது தொடர்பாக குடோனுக்குள் புகுந்து போலி மதுபானங்களை குடித்து சென்ற மதுபிரியர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த குடோனுக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.மேலும் திருவள்ளூர் மாவட்ட கலால் உதவி இயக்குனர் மாலா மது பாட்டில்கள் அழிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

    • ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாஷ் உரம் மாயமானது.
    • கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கப்பல் மூலம் ஏராளமான உணவு பொருட்களும் மற்றும் பல்வேறு பொருட்களும் கொண்டு வரப்படுகிறது. அவைகளை நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் தினசரி குடோன்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது.

    இதில் கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாகவும், இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவியாக இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

    இந்நிலையில் ரஷியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் டன் பொட்டாஷ் உரத்தை பல்வேறு குடோன்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாஷ் உரம் மாயமானது.

    இதனை முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் பறிமுதல் செய்த முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் -இன்ஸ்பெக்டர் சுந்தர் மகாராஜன், தனிப்பிரிவு காவலர்கள் ஜான்சன், செல்வின் ராஜா, மற்றும் அருணாச்சலம் உள்ளிட்ட போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மாதவன், மதியழகன் ஆகிய 2 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி டி.எஸ்.பி. சத்யராஜ் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றார். இதற்கிடையே கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கபட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • சுமார் ரூ,5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, திருக்களாச்சேரி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரிடம் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், சேங்கலித் தெருவை சேர்ந்த கமல்தாஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் மகேந்திரன் பொறையார் அருகே காளியப்பன் நல்லூர் ஊராட்சி கண்ணப்ப ன்மூலை கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கபட்டு ள்ளதாக மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீசார்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெ க்டர் செல்வி தலைமை யிலான போலீசார்கள் தலைமை காவலர்கள் மகேந்திரன், அன்பரசன், விஜய் கணேஷ், மற்றும் போலீசர்கள் செந்தில், மனோகர், மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ,5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கமல்தாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். உரிமையாளர் மகேந்திரன் மற்றும் அவர் கூட இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • குடோனில் கடலை மூட்டையை இறக்கிவிட்டு பஸ் நிலையம் அருகில் கடலை கடைக்கு பணம் வாங்க வந்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நன்னிலம்:

    கும்பகோணம் ஒட்டன் செட்டி தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 35). இவர் கடலை கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள குடோனில் கடலை மூட்டையை இறக்கிவிட்டு நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் கடலைக் கடைக்கு பணம் வாங்க வந்துள்ளார்.

    அப்போது சரக்குவாகனத்தின் கதவை திறந்து இறங்கும் போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து சிவசங்கரன் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நன்னிலம் போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவிட்டு மற்றும் உமி ஆகியவைகள் குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.
    • குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து இயங்கி வரும் இந்த அரிசி ஆலையின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் இங்கு எடுத்து வரப்பட்டு ஊறல் போடப்பட்டு உலர வைக்கப்பட்டு பின்னர் அரைக்கப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலையில் நெல் அரவை செய்யும்போது, அரவை இயந்திரத்தின் மூலம் வெளியேறும் தவிடு மற்றும் உமி ஆகியவைகள் அங்குள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியை சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதனை அறிந்த இரவு நேர அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உரிய நேரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பேராபத்தும் பெரும் நஷ்டமும் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொது ரகத்துக்கு ரூ.2015 என உயர்த்தி கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
    • இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார் ‌.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லை கொள்முதல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக ஆண்டு தோறும் அக்டோபர் 1ஆம் தேதி தான் குறுவை நெல் கொள்முதல் செய்யப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாத இறுதியில் திறக்கப்பட்டது.

    இந்த காரணத்தினால் குறுவை அறுவடை முன்கூட்டியே வரும் என்று உணர்ந்த முதலமைச்சர் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் குறைந்தபட்ச ஆதார விலை சன்ன ரகத்துக்கு ரூ.2160, பொது ரகத்துக்கு ரூ.2015 என உயர்த்தி கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    திறந்தவெளியில் இருக்கிற நெல் நனையாமல் இருப்பதற்காக 3 லட்சம் மெட்ரிக் டன் செமி குடோன் கட்டுவதற்காக ரூ. 238 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 20 இடங்களில் பணி ஆரம்பிக்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 50 ஆயிரம் மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட செமி குடோன் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணி அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    2022-23 நெல் கொள்முதல் பருவங்களில் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 29 ஆயிரத்து 859 விவசாயிகளுக்கு ரூ.417 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்சமயம் 819 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    508 பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர்களை இந்த ஆண்டு பணியமர்த்த இருக்கிறோம்.

    இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 5008 பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன.

    ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலைய ங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • குடோன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த கலெக்டர் அரவிந்த் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் இன்று கோட்டார் பஜார் பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையில் நகர்நல அதிகாரி விஜய் சந்திரன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் ஒரு கடையில் சோதனை நடத்தினர்.

    கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது பக்கத்தில் உள்ள குடோனில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    அங்கு சோதனை செய்த அதிகாரிகள் 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

    குடோன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் கோட்டாறு பகுதியில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×