search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bundle"

    • பெண் தலைமை காவலர் பவானி ஆகியோர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
    • 600 கிலோ அரிசி கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சின்ன கங்கனாங்குப்பம் பாண்டி சாலையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோ கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் ராஜேந்தி ரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை,போலீஸ்காரர்கள் முருகா னந்தம், ராஜா, பெண் தலைமை காவலர் பவானி ஆகி யோர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். இதில் சாக்கு முட்டைகள் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீ சார் சாக்கு மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. பின்னர் வாகன டிரைவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி னர். அவர் கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த செல்வம் என தெரியவந்தது. மேலும் 600 கிலோ அரிசி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகளை சோதனை செய்து குடோ னில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

    • 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து மத்திய குழுவினரால் ஆய்வு.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருப்பத்தூர், ஆலத்தம்பாடி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழக சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குனர் எம்.இசட்.கான்.

    இந்திய உணவு கழக தரக்கட்டுப்பாடு பிரிவு தொழில் நுட்ப அலுவலர் சி.யூனிஸ், உதவி பொது மேலாளர் குணால் குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மண்டல மேலாளர் செந்தில் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வின்போது மாரிமுத்து எம்.எல்.ஏ உடனிருந்தார்.

    டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதை யொட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது.

    இதையடுத்து, திருவாரூர் மாவட்டம் பூவானத்தம், முன்னவால்கோட்டை, செருமங்கலம், ஓவர்சேரி, திருப்பத்தூர், ஆலத்தம்பாடி ஆகிய நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து மத்திய குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன்,வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது.
    • அப்போது அங்கு தார்பாய்களை விலக்கி நெல் மூட்டைகளை அமைச்சர்கள் சோதனை மேற்கொண்டனர்.

    வல்லம் :

    தஞ்சை அருகே உள்ள மொன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்காண நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அங்கு திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே மொன்னையம்பட்டியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு மற்றும் உடுமலைப்பேட்டை சேமிப்பு கிடங்குகளில் போதிய பராமரிப்பு இல்லா ததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் இன்றுகாலை மொன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு தார்பாய்களை விலக்கி நெல் மூட்டைகளை அமைச்சர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லின் ஈரப்பதத்தி னையும் சோதனை செய்தனர்.

    பின்னர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகளில் இருந்து நெல் மாதிரிகள் எடுத்து ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தோம். அதில் 14 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது. நெல் மூட்டைகள் மழையில் நனையவில்லை.. அதே போல் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் சாக்கு, சணல் கையிருப்பு உள்ளது. விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் நெல் தேக்கம் அடையாமல் கொள்முதல் செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.3லட்சம்மெட்ரிக் டன்நெல்சேமிக்கும் வகையில் செமி குடோன் கட்டவும், தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன் 13இ டங்களில் அரவை ஆலைகள் திறக்கவும் அனுமதி வழங்க ப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கட்டிய நெல் சேமிப்பு குடோனுக்கு சிமெண்ட்ரோடு, மின்சார வசதி இல்லாமல் முறையாக பராமரிப்பு செய்யாமல் எடப்பாடி பழனிசாமி எங்களை குற்றம்சாட்டு வதற்கு நாங்கள்பொருப்பல்ல என்று கூறினார்.

    அப்போது தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, தஞ்சை தாசில்தார் மணிகண்டன், தஞ்சை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருளானந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஜோதிவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது.
    • ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியை சேர்ந்த பொன்னையன் மகன் ரமேஷ் (வயது40) . இவர் தனியார் வறுகடலை மில்லில் வேலை செய்து வந்தார்.

    நேற்று தூத்துக்குடியில் இருந்து வெள்ளகோவில், ராமலிங்கபுரத்திற்கு பொட்டுக்கடலை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் இருந்து நேற்று காலையில் மூட்டையை இறக்கி கொண்டிருந்தார். அப்போது மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது. இதனை கண்டவர்கள் உடனே ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கே. ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இறந்து போன ரமேசுக்கு மாதவி (32) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

    ×