வெள்ளகோவிலில் மூட்டை தூக்கும்போது தடுமாறி விழுந்து தொழிலாளி சாவு

மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது. ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியை சேர்ந்த பொன்னையன் மகன் ரமேஷ் (வயது40) . இவர் தனியார் வறுகடலை மில்லில் வேலை செய்து வந்தார்.

நேற்று தூத்துக்குடியில் இருந்து வெள்ளகோவில், ராமலிங்கபுரத்திற்கு பொட்டுக்கடலை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் இருந்து நேற்று காலையில் மூட்டையை இறக்கி கொண்டிருந்தார். அப்போது மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது. இதனை கண்டவர்கள் உடனே ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கே. ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இறந்து போன ரமேசுக்கு மாதவி (32) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com