search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "storage"

  • சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.
  • அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர்.

  சேலம்:

  தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறை தலைவர் காமினி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோர் சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.

  அப்போது அத்தியா வசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெளிமாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல்கள் ஏதும் நடைபெறக் கூடாது என்றும், தொடர்ந்து வாகன தணிக்கைகள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  மேலும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் ஆகியவைகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

  தொடர்ந்து நேற்று கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜா, காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி ஆகியோர் குழு தனியார் கிடங்கு உரிமையாளர்களிடம் அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர். மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

  • மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து பேசினார்.
  • மோடி பிரதமர் ஆன பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

  சீர்காழி:

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மத்திய அரசு பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

  மாவட்ட மகளிர் அணி தலைவி ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுதா, மாநில செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட பொருளாளர் அமுதா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து கூட்டத்தில் பேசினர்.

  மேலும் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம், மோடி பிரதமர் ஆன பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளதாகவும், தொலைநோக்கு பார்வையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் பேசினர்.

  இந்நிகழ்ச்சியில் சீர்காழி நகர செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் வெற்றிலை முருகன், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் செல்வ முத்து, இளைஞர் அணி தலைவர் ஹரி, அருள்அழகன், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

  • புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.
  • 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.

  நாகப்பட்டினம்:

  சமூகசேவகர் பாரதிமோகன் அறக்கட்டளை சார்பில் சுமார் 11 வருடங்களாக சாலையோரம் ஆதரவின்றி வாழும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தினந்தோறும் 250-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கி மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களை முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.

  அதன்படி நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.

  அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், வழங்கினார்.

  இதில் பாரதிமோகன் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது.
  • அப்போது அங்கு தார்பாய்களை விலக்கி நெல் மூட்டைகளை அமைச்சர்கள் சோதனை மேற்கொண்டனர்.

  வல்லம் :

  தஞ்சை அருகே உள்ள மொன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்காண நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அங்கு திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

  தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே மொன்னையம்பட்டியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு மற்றும் உடுமலைப்பேட்டை சேமிப்பு கிடங்குகளில் போதிய பராமரிப்பு இல்லா ததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் இன்றுகாலை மொன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டனர்.

  அப்போது அங்கு தார்பாய்களை விலக்கி நெல் மூட்டைகளை அமைச்சர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லின் ஈரப்பதத்தி னையும் சோதனை செய்தனர்.

  பின்னர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகளில் இருந்து நெல் மாதிரிகள் எடுத்து ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தோம். அதில் 14 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது. நெல் மூட்டைகள் மழையில் நனையவில்லை.. அதே போல் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் சாக்கு, சணல் கையிருப்பு உள்ளது. விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் நெல் தேக்கம் அடையாமல் கொள்முதல் செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.3லட்சம்மெட்ரிக் டன்நெல்சேமிக்கும் வகையில் செமி குடோன் கட்டவும், தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன் 13இ டங்களில் அரவை ஆலைகள் திறக்கவும் அனுமதி வழங்க ப்பட்டுள்ளது.

  கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கட்டிய நெல் சேமிப்பு குடோனுக்கு சிமெண்ட்ரோடு, மின்சார வசதி இல்லாமல் முறையாக பராமரிப்பு செய்யாமல் எடப்பாடி பழனிசாமி எங்களை குற்றம்சாட்டு வதற்கு நாங்கள்பொருப்பல்ல என்று கூறினார்.

  அப்போது தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, தஞ்சை தாசில்தார் மணிகண்டன், தஞ்சை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருளானந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஜோதிவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

  வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.
  பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.

  * அதிகாரம் பெற்ற முகவரிடம் (Power Of Attorney) சொத்து வாங்குவதாக இருந்தால், சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒருவேளை விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம். மேலும், அதிகாரம் அளித்தவர் உயிருடன் இல்லையென்றால் அந்த அதிகாரப்பத்திரம் செல்லாது.

  * நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் நிலையில் அதற்கான உரிமை, உடைமை மற்றும் அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வது முக்கியம்.

  * சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை வங்குவதற்கு நீதிமன்ற அனுமதி அவசியம்.

  * நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லாத நிலையில், வாரிசு சான்றிதழ் மூலம் வாரிசுகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் சம்மதத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும். வாரிசுதாரர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம் சொத்துப் பரிமாற்றம் நடக்கவேண்டும்.

  * சொத்துக்கான மூல ஆவணத்தை பெற்று தக்க சட்ட ஆலோசனை பெறவேண்டும். மூல ஆவணம் இல்லாத சொத்துக்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடமானம் வைக்கப்பட்டதாக இருக்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு மூல ஆவணம் அடமானத்தில் இருக்கலாம். அந்த நிலையில் வாங்கப்படும் வீட்டின் மீது வங்கிக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற சான்றிதழ் (NOC) பெறுவது அவசியம்.

  * சொத்தின் மீதான முந்தைய பரிவர்த்தனைகளை கண்டறிய 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ் பெற்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

  * அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் அதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்ளிட்ட அனைத்து வித அனுமதிகளையும் பெற்று சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபட அளவுக்கும் அதிகமாக, கட்டிடப் பரப்பளவு இருந்தால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரலாம்.

  * சொத்தின் பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் உள்ள நிலையில் விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்டு, அதை பதிவு செய்து கொள்வதுதான் சட்டப்படி பாதுகாப்பானது. அந்த ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  வேலை வாய்ப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகமானதால், வீடு மற்றும் நிலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
  தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு, ஒழுங்குமுறை சட்டம் 1976-ல் அமலுக்கு வந்து, 1978-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 500 சதுர மீட்டருக்கும் அதிகமாக நகர்ப்புற நிலம் வைத்துள்ள எந்த ஒரு தனி நபரும், உரிய அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் நிலத்தை விற்பனை செய்ய அனுமதியில்லை. அதனால், வீட்டு மனை வாங்கும்போது அந்த நிலம் நகர்ப்புற உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்பதை அறிந்து செயல்படுவதே பாதுகாப்பானது.

  கடந்த 1983-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான ஏக்கர் அளவில் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டு, கிட்டத்தட்ட 70 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவற்றில் 48 லட்சம் ஏக்கருக்கும் மேல் நிலமற்ற மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நில உச்ச வரம்பு சட்டத்தில், நிலங்கள் நன்செய் மற்றும் புன்செய் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  நகர்ப்புற நில உச்சவரம்பு

  வேலை வாய்ப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகமானதால், வீடு மற்றும் நிலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால், நகர்ப்புற நிலங்களை முறைப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது ஆகியவை நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தின் நோக்கம் ஆகும். தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம், 1961 (Tamilnadu Land Reforms Fixation of Ceiling on Land Act, 1961 ) இந்திய நாடாளுமன்றம் மூலம் 1964-ம் ஆண்டு ஜூன் 20 நாளன்று 1966-ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் உள்ளடக்கியதாக கொண்டு வரப்பட்டது.

  இச்சட்டத்தை செயலாக்குவதில், பொதுமக்கள் அடைந்த பாதிப்புகள் குறித்த முறையீடுகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் ஆகியவை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில், 1978-ம் ஆண்டில் நகர்ப்பகுதி நில உச்ச வரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தை அரசு இயற்றியது. இச்சட்டம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைமுறையில் உள்ளது.

  கவனிக்க வேண்டிய குறிப்புகள்

  * ஐந்து உறுப்பினர்களுக்கு மேற்படாத குடும்பத்திற்கான நில உச்சவரம்பானது 15 தரநிலை ( Standard Acres ) ஏக்கர்களாகும்.

  * ஐந்து உறுப்பினர்களுக்கு மேற்பட்டிருக்கும் குடும்பத்தினர்களின் நில உச்சவரம்பு, 15 தரநிலை ஏக்கர்களும், கூடுதலாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தரநிலை ஏக்கர்களும் ஆகும்.

  * எக்காரணம் கொண்டும் மொத்த உச்ச அளவு 30 தரநிலை ஏக்கர்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

  * குடும்பத்து பெண் உறுப்பினர் கொண்டிருக்கும் சீதன நிலத்துடன் சேர்த்து குடும்பம் கொண்டிருக்கும் மற்ற நிலத்தையும் சேர்த்து 15 தரநிலை ஏக்கர்களுக்கு மேற்பட்டிருந்தால், பெண் உறுப்பினர் 10 தரநிலை ஏக்கர்களுக்கு மிகைபடாமல் சீதன நிலத்தை வைத்திருக்கும் உரிமை உண்டு.

  * இடம் அல்லது மனை நில உச்ச வரம்பு சட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தால், சம்பந்தப்பட்ட கிராம கணக்கில் ULT (Urban Land Tax) என்ற குறிப்பு இருக்கும். மேலும், அது சம்மந்தமாக வழக்கு ஏதாவது இருந்தால் நீதிமன்ற ஆணை எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

  ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன என உங்களுக்குத் தெரியுமா?

  காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற நிதிசார் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஆயுள் காப்பீட்டு பாலிசியை பிணையாகக் கொண்டு இக்கடனை அளிக்கின்றன. ஆனால் இந்தக் கடன் திட்டமானது டெர்ம் இன்சூரன்ஸ் அல்லது யூலிப்ஸ் அல்லது ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்குக் கிடையாது.

  இதில் வழங்கப்படும் கடன் அளவானது பாலிசியின் வகை மற்றும் சரண்டர் மதிப்பு இரண்டையும் பொருத்து வழங்கப்படும். கடன் தொகையானது பாலிசியின் சரண்டர் மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவீத அளவில் வழங்கப்படும். அதிகபட்சம் 80 முதல் 90 சதவீதம் வரை சரண்டர் மதிப்பில் இருந்து கடன் பெற முடியும்.

  இந்தக் கடன் திட்டம், மணி பேக் பாலிசி மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

  இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கடன் பெற, அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் பாலிசி பத்திரம் அல்லது ஆவணத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். கடன் தொகையைப் பெறுவதற்கான வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

  காப்பீட்டு நிறுவனம் அல்லது நிதி நிறுவனம், இந்தக் கடன் தொகையைச் செயல்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையைக் கட்டணமாகப் பெறும்.

  ‘பர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை விட, இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. ஒருவேளை வட்டித் தவணை, பாலிசி சரண்டர் மதிப்பை விட அதிகமாக இருந்தால் பாலிசிதாரர் அவரது பாலிசியை இழக்க நேரிடும் என்பதை மட்டும் நினைவில்கொள்ள வேண்டும்.
  சில முதலீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாகவே விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்வது தவறு.
  ஒவ்வொரு முறையும் முதலீட்டுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்யும்போது, அது நிலையான வைப்பு நிதியாக இருந்தாலும், பரஸ்பர நிதியாக இருந்தாலும், வங்கியில் புதிய கணக்குத் துவங்குவதாக இருந்தாலும் அந்தப் படிவத்தில் ஒரு தனிப் பிரிவு ஒன்று இருக்கும். அதில் உங்கள் நாமினி (வாரிசுதாரர்) பற்றிய குறிப்பைத் தருமாறு கேட்கப்பட்டிருக்கும்.

  இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாகவே விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்வது தவறு.

  நாமினி என்பவர் யார்? நாமினி என்று உங்கள் முதலீட்டு விண்ணப்பம் அல்லது வங்கிக் கணக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் நபர், உங்களுக்கு எதிர்பாராத அசம்பாவிதம் நேர்ந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகையைப் பெறுவதற்கான உரிமை உள்ளவர். நாமினியாக உங்கள் முதல்வட்ட சொந்தத்தை நீங்கள் அறிவிக்கலாம். அதாவது உங்கள் பெற்றோர், உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது உங்கள் உடன்பிறந்தவர்கள்.

  சில முதலீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நபருக்கும் உங்கள் தொகையில் குறிப்பிட்ட விகிதத்தைப் பிரித்துப் பதிவு செய்யலாம். அப்படி நீங்கள் எந்த விகிதமும் குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகை சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும்.

  நாமினியாக ஏன் ஒருவரை நியமிக்கவேண்டும்? எதிர்பாராத விதமாக இறந்தவரின் வங்கிக் கணக்கிலும், முதலீட்டிலும் இருக்கும் பணம் அவருடைய சட்ட வாரிசுகளுக்கு உரிமையாகிறது. இது சொல்வதற்கு மிகவும் சுலபமாக இருந்தாலும் செயல்முறையில் இது மிகப்பெரிய காரியமாக உள்ளது. பல வித ஆவணங்கள், இறப்புச் சான்றிதழ், சில நேரங்களில் கோர்ட்டு ஆர்டர் போன்றவையும் தேவைப்படுகின்றன. வங்கிக்குத் தேவையான ஆவணங்கள் கிடைக் கும் வரை, இறந்தவரின் பணம் வங்கியிலேயே வைக்கப்படும். இந்த முழுச் செயல்முறையும் முடிய சில வாரங்கள் பிடிக்கும். இருப்பினும், வங்கி கணக்குத் தொடங்கும்போது அல்லது அதற்குப் பின்னர், ஒருவர் பெயர் நாமினியாக இணைக்கப்பட்டிருந்தால் இந்தச் செயல்முறை சற்று எளிதாகவும் விரைவாகவும் முடியும். வங்கியும் நியமிக்கப்பட்டவரிடம் குறைந்த ஆவணங்கள் மூலம் பணத்தைக் கொடுத்துவிடும்.

  வங்கிக் கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு மட்டும் நாமினி நியமனம் தேவைப்படுவதில்லை, வங்கி லாக்கருக்கும் நாமினி தேவை. லாக்கர் கணக்கு வைத்திருப்பவரின் திடீர் மறைவுக்குப் பின், நாமினி இல்லையேல், குறிப்பிட்ட ஆவணங்கள் கொடுத்தபிறகே, லாக்கரில் உள்ள பணம் மற்றும் நகைகளை வங்கியில் இருந்து ஒப்படைப்பார்கள்.

  புதிதாக மணமானவர்கள் அல்லது கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பேங்க் லாக்கர் கணக்குக்கும் நாமினி அவசியம் தேவை.

  இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, ரூ. 8 ஆயிரம் கோடி, கோரப்படாத நிதியாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் உள்ளது. உரிமையாளர் இல்லாத வைப்பு நிதி, கோரப்படாத நிதியாக அறிவிக்கப்படுகிறது. அசல் உரிமையாளர் வைப்பு நிதியின் விவரத்தை இழந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம். நாமினி பற்றிய தகவலை குறிப்பிடாமலும் இருக்கலாம். இதன் காரணமாக இந்த நிதி கோரப்படாத நிதியாக உள்ளது. நாமினி பெயர் குறிப்பிடாமல் இருப்பதால் எவ்வளவு பிரச்சினை என்பதை இவற்றில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

  எனவே நாம், வங்கிக்குச் சென்று நமது கணக்கில் நாமினி பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்வது அவசியம். அப்படி நாம் குறிப்பிடவில்லை என்றால் அதற்கான படிவத்தை வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.

  பொதுவாக பெண்கள் இந்தப் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குடும்ப உறுப்பினரின் திடீர் மறைவால் அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்குரிய பணமும் பறிபோகக் கூடாது. இத்தகைய சூழ்நிலையை யாரும் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு நாமினி உள்ளார் என்பதை உங்கள் வீட்டுப் பெண்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வருங்காலத்தில் ஒரு நிச்சயமற்ற சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
  ×