search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Texts"

    • டெல்டா மாவட்டத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.
    • கணித ஆசிரியர் பாலதண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை தாங்கினார்.

    வேளுக்குடி ஊராட்சி தலைவர் நீலமணி பிரகாஷ், சித்தனக்குடி ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் ராசகணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில்:-

    மாணவர்கள் பிறமொழி கலப்பின்றி தமிழில் பேசிப்பழக வேண்டும். பிழையின்றி தமிழ் எழுத அடிப்படையாக பாட நூல்களை கடந்து நிறைய நூல்கள் வாசிக்க வேண்டும்.

    இலக்கிய படைப்புகளை தந்த ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் வட்டார வழக்குகளிலேயே தனிச்சிறப்பு பெற்ற சொற்களை கொண்ட தஞ்சை வட்டார வழக்கு சொற்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.

    நிறைய திருமுறை பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள், நீதி இலக்கியங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    முன்னதாக கணித ஆசிரியர் பாலதண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் அறிவியல் ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார். தொடர்ந்து, பல்வேறு கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

    • மதுரை வாடிப்பட்டி திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மன்ற தலைவர் தனபாலன் தலைமை தாங்கி வள்ளலாரின் நூல்களை வழங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பாக வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் தனபாலன் தலைமை தாங்கி வள்ளலாரின் நூல்களை வழங்கினார். உலக நல சத்திய ஞான சித்தாந்த சபை நிர்வாகி பழக்கடை பாண்டி, காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கண்ணதாசன் இலக்கியபேரவை தலைவர் கவிஞர் பொன் கலை தாசன் வரவேற்றார். திருவள்ளுவர் மன்ற செயலாளர் முனைவர் நவநீதகிருஷ்ணன் வள்ள லார் உருவபடத்திற்கு மாலை அணிவித்தார். பொருளாளர் வக்கீல் சந்திர சேகரன் பசிபிணியை போக்கும் பொங்கல் அன்னதானம் வழங்கினார். இதில் ஆட்டோ கண்ணன், ராமராஜசேகரன், குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவக்குமார் நன்றி கூறினார்.

    • பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் மிகுந்த எழுத்தாளர்களின நூல்கள் காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
    • மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுவது மக்கள் மத்தியில் ஒரு புதிய பார்வையையும் சிந்தனையையும் உருவாக்கி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறும்போது:-

    புத்தக கண்காட்சி பன்முகத் தன்மையுடன் நடந்து வருவது பாராட்டுக்குரியது. பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் மிகுந்த எழுத்தாளர்களின நூல்கள் காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது. மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுவது மக்கள் மத்தியில் ஒரு புதிய பார்வையையும் சிந்தனையையும் உருவாக்கி உள்ளது.

    இதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டரின் சிறந்த முயற்சிக்கும் விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    ×