வள்ளலார் பிறந்தநாள்

மதுரை வாடிப்பட்டி திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் தனபாலன் தலைமை தாங்கி வள்ளலாரின் நூல்களை வழங்கினார்.
வள்ளலார் பிறந்தநாள்
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பாக வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் தனபாலன் தலைமை தாங்கி வள்ளலாரின் நூல்களை வழங்கினார். உலக நல சத்திய ஞான சித்தாந்த சபை நிர்வாகி பழக்கடை பாண்டி, காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கண்ணதாசன் இலக்கியபேரவை தலைவர் கவிஞர் பொன் கலை தாசன் வரவேற்றார். திருவள்ளுவர் மன்ற செயலாளர் முனைவர் நவநீதகிருஷ்ணன் வள்ள லார் உருவபடத்திற்கு மாலை அணிவித்தார். பொருளாளர் வக்கீல் சந்திர சேகரன் பசிபிணியை போக்கும் பொங்கல் அன்னதானம் வழங்கினார். இதில் ஆட்டோ கண்ணன், ராமராஜசேகரன், குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவக்குமார் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com