search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டரின் முயற்சியால் நாகையில் புத்தக கண்காட்சி - பி.ஆர்.பாண்டியன் பாராட்டு
    X

    தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் புத்தக கண்காட்சியை பார்வையிட்டார்.

    கலெக்டரின் முயற்சியால் நாகையில் புத்தக கண்காட்சி - பி.ஆர்.பாண்டியன் பாராட்டு

    • பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் மிகுந்த எழுத்தாளர்களின நூல்கள் காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
    • மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுவது மக்கள் மத்தியில் ஒரு புதிய பார்வையையும் சிந்தனையையும் உருவாக்கி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறும்போது:-

    புத்தக கண்காட்சி பன்முகத் தன்மையுடன் நடந்து வருவது பாராட்டுக்குரியது. பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் மிகுந்த எழுத்தாளர்களின நூல்கள் காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது. மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுவது மக்கள் மத்தியில் ஒரு புதிய பார்வையையும் சிந்தனையையும் உருவாக்கி உள்ளது.

    இதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டரின் சிறந்த முயற்சிக்கும் விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    Next Story
    ×