search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் தனியார் சேமிப்பு கிடங்குகளில் அதிகாரிகள் ஆய்வு
    X

    தனியார் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய காட்சி.

    சேலத்தில் தனியார் சேமிப்பு கிடங்குகளில் அதிகாரிகள் ஆய்வு

    • சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.
    • அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர்.

    சேலம்:

    தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறை தலைவர் காமினி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோர் சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.

    அப்போது அத்தியா வசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெளிமாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல்கள் ஏதும் நடைபெறக் கூடாது என்றும், தொடர்ந்து வாகன தணிக்கைகள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் ஆகியவைகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

    தொடர்ந்து நேற்று கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜா, காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி ஆகியோர் குழு தனியார் கிடங்கு உரிமையாளர்களிடம் அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர். மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    Next Story
    ×