search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
    X

    ஆலத்தம்பாடி கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு.

    நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

    • 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து மத்திய குழுவினரால் ஆய்வு.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருப்பத்தூர், ஆலத்தம்பாடி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழக சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குனர் எம்.இசட்.கான்.

    இந்திய உணவு கழக தரக்கட்டுப்பாடு பிரிவு தொழில் நுட்ப அலுவலர் சி.யூனிஸ், உதவி பொது மேலாளர் குணால் குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மண்டல மேலாளர் செந்தில் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வின்போது மாரிமுத்து எம்.எல்.ஏ உடனிருந்தார்.

    டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதை யொட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது.

    இதையடுத்து, திருவாரூர் மாவட்டம் பூவானத்தம், முன்னவால்கோட்டை, செருமங்கலம், ஓவர்சேரி, திருப்பத்தூர், ஆலத்தம்பாடி ஆகிய நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து மத்திய குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன்,வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×