என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்த காட்சி.
கடலூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
- பெண் தலைமை காவலர் பவானி ஆகியோர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
- 600 கிலோ அரிசி கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அடுத்த சின்ன கங்கனாங்குப்பம் பாண்டி சாலையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோ கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் ராஜேந்தி ரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை,போலீஸ்காரர்கள் முருகா னந்தம், ராஜா, பெண் தலைமை காவலர் பவானி ஆகி யோர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். இதில் சாக்கு முட்டைகள் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீ சார் சாக்கு மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. பின்னர் வாகன டிரைவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி னர். அவர் கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த செல்வம் என தெரியவந்தது. மேலும் 600 கிலோ அரிசி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகளை சோதனை செய்து குடோ னில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.






