என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker dies"

    • நேருக்கு நேர் மோதிக்கொண்டது
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள பண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30) கூலி வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் பண்டப்பல்லியில் இருந்து பரதராமி செல்ல பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமிரெட்டிபல்லி கிராமம் தனியார் கல்லூரி அருகே வரும்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து தாதுமணல் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற லாரியும்-பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் விரைந்து வந்து சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சம்பவத்தன்று சித்தோடு அருகே ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் வேலைக்கு நல்லசாமி சென்று இருந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையம் பட்டுசாமி கோவில் தெரு வை சேர்ந்தவர் நல்லசாமி (57). கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி கண்ணம்மாள்.

    கடந்த சம்பவத்தன்று சித்தோடு அருகே ஒரு வீட்டில் கட்டிடம் கட்டும் வேலைக்கு நல்லசாமி சென்று இருந்தார். அங்கு கட்டிட வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது கால் தவறி சாரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரு க்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நல்ல சாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலாயுதம். இவரது மகன் சிவக்குமார் (வயது 33), வெள்ளித் தொழிலாளி.
    • குடும்ப தகராறு காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் சத்யா நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சிவக்குமார் (வயது 33), வெள்ளித் தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உடலில் தீ பற்றி எரிந்தபோது வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் நேற்று மாலை பரிதமாக இறந்தார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் பெருமாள் வயது 43 தொழிலாளி. இவருடைய நண்பர் சத்யராஜ் என்பவருடன் வேலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு நேற்று வந்தனர். அப்போது பெருமாள் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புதூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.

    இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடி வைத்து கல் உடைக்கப்பட்டது. குவிந்திருந்த கல் குவியலை அகற்றும் பணி இன்று காலை நடந்தது.

    இதில் ராஜபாளையம் அருகே உள்ள இளந்திரம்கொண்டான் கிராமத்தை சேர்ந்த மாரிக்கனி(வயது50), தென்காசி மாவட்டம் வலசையை சேர்ந்த முத்துமாணிக்கம்(45), சாமிராஜா(40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    கற்குவியலை அகற்றி கொண்டிருந்தபோது திடீரென கற்கள் சரிந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரும் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த மாரிக்கனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடி கொண்டிருந்த முத்து மாணிக்கம், சாமிராஜா ஆகிய 2 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் விபத்து குறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிக்கனியின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மரம் வெட்டும் தொழிலாளியான இவர் தற்போது ராசிபுரம் அருகே உள்ள தொட்டிய வலசு கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
    • நேற்று பாண்டியன், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொட்டிய வலசு பிரிவு சாலையை கடக்க முயன்றார்.

    ராசிபுரம்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் தற்போது ராசிபுரம் அருகே உள்ள தொட்டிய வலசு கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். நேற்று பாண்டியன், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொட்டிய வலசு பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தில் இறந்த பாண்டியனின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து தொடர்பாக ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜா கூலித் தொழிலாளி இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
    • சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை பவளக்கொடி வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கூலித் தொழிலாளி. இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் நாட்டு மருந்துகள் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் இவர் சோர்வாகவும், வேலைக்கு செல்லாமலும் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று திடீரென இவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எடப்பாடி கோழிப் பண்ணை பகுதியை சேர்ந்த வர் பச்சமுத்து (வயது 58). கூலி தொழிலாளி.
    • கடந்த 20-ந் தேதி சேலம் அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி கோழிப் பண்ணை பகுதியை சேர்ந்த வர் பச்சமுத்து (வயது 58). கூலி தொழிலாளி. இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 20-ந் தேதி சேலம் அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் திடீரென இவர் உயிரிழந்தார். இதை அறிந்த பச்சமுத்துவின் உறவினர்கள் இன்று மருத்துவமனை டீன் அலுவலகத்தை முற்றுகை யிட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து இறந்த பச்சமுத்துவின் மகன் கூறும்போது, எனது தந்தைக்கு சி.டி. ஸ்கேன் எடுத்தனர். அதேபோல விபத்தில் அனுமதிக்கப் பட்ட, எனது தந்தை பெயர் கொண்ட மற்றொரு பச்சமுத்து என்பவருக்கும் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இருவரின் மருத்துவ அறிக்கை மாறிய தால் எனது தந்தைக்கு தர வேண்டிய சிகிச்சை வேறு ஒரு நபருக்கும், தலையில் அடிபட்டு விபத்தில் அனு மதிக்கப்பட்ட பச்சமுத்து என்பவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையை எனது தந்தைக்கும் அளித்த தால், அவர் உயிரிழந்து விட்டார்.

    தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது இறப்புக்கு தந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்று மருத்துவர்கள் கவனக்கு றைவாக செயல்பட்டால், எவ்வாறு ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி வந்து சிகிச்சை பெற முடியும்? எனவே மருத்து வர்கள் கவனமுடன் செயல்பட்டு சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் எனது தந்தை உடலை பிரேத பரிசோ தனை செய்யாமல் தர வேண்டும் என தெரி வித்தார். மருத்துவர் தவறான சிகிச்சை அளித்த தன் காரணமாக, தந்தை இறந்ததாக கூறி மருத்துவ மனை டீன் அலுவலகத்தை மகன் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

    • கார்த்திக் (வயது 34). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
    • குடிப்ப ழக்கம் உடைய கார்த்திக், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மது அருந்திய தாக கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் காவேட்டிப் பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 34). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் குடிப்ப ழக்கம் உடைய கார்த்திக், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மது அருந்திய தாக கூறப்படுகிறது. இத னால் உடல் நலம் பாதிக்கப் பட்ட அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் போலீ சார், அவரை மீட்டு நாமக் கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    குடிபோதையில் இறந்த அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத னர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தங்கதுரை (வயது 22). தேங்காய் பறிக்கும் தொழிலாளி.
    • திவாகர் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பா ளையத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தங்கதுரை (வயது 22). தேங்காய் பறிக்கும் தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரையைச் சேர்ந்த திவாகர் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்பொ ழுது நிலை தடுமாறி தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியி லேயே தங்கதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை சவக்கிடங்கில் வைத்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அம்மூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 70). கூலித்தொழிலாளி.

    கடந்த 25-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.

    இந்தநிலையில் அனந்தலை மேல்புதுப்பேட்டை பசும் பொன் நகரில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதுகுறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குப்புராஜ் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செந்தில் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.
    • மதியம் சுமார் 1.30 மணி அளவில் செந்தில், கார்த்தி மற்றும் குடும்பத்தினர், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி காவிரி ஆற்று தடுப்பணை பாலம் அருகே குளிக்கச் சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூ டல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் செந்தில் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (26) என்பவரின் சகோத ரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். செந்தில் தனது மைத்துனர் கார்த்தி வீட்டில் தங்கியிருந்து சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் செந்தில், கார்த்தி மற்றும் குடும்பத்தினர், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி காவிரி ஆற்று தடுப்பணை பாலம் அருகே குளிக்கச் சென்றனர்.

    அப்போது, காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டி ருந்த செந்தில் எதிர் திசையான பாகூர் பகுதிக்கு நீந்தி சென்றுள்ளார். பாதி வழி சென்ற அவரால், அதன் பின்னர் நீந்தி செல்ல முடியவில்லை. மேலம் காவேரி ஆற்று தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜேடர்பா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் வெப்படை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் மீனவர்கள் உதவியுடன் தீயணைப்புத் துறை வீரர்கள் அப்பகுதியில் இரு கரையிலும் செந்திலின் உடலை தேடிப் பார்த்தனர்.

    இரவு சுமார் 8 மணி அளவில் செந்தில் உடல் சோழசிராமணி பகுதியில் ஒதுங்கி இருந்தது. இதை யடுத்து தீயணைப்புத் துறையினர் செந்தில் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தி லின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×