சிதம்பரம் அருகே நாய் கடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

ராஜா கூலித் தொழிலாளி இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.
சிதம்பரம் அருகே நாய் கடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை பவளக்கொடி வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கூலித் தொழிலாளி. இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் நாட்டு மருந்துகள் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் இவர் சோர்வாகவும், வேலைக்கு செல்லாமலும் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திடீரென இவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com