என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  முத்தியால்பேட்டையில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல்: ரவுடி உள்பட 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்தியால்பேட்டையில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  புதுச்சேரி:

  முத்தியால்பேட்டை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் முருகன்(வயது53). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கனகவள்ளி என்ற பெண்ணை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தனர். கனகவள்ளிக்கு திருமணமாகி விட்டது.

  இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த ஜனா என்ற ஜனார்த்தன் மதுபோதையில் முருகன் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

  இதனை அவ்போது முருகன் கண்டித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கனகவள்ளி வெளியே சென்ற போது ஜனா கேலி-கிண்டல் செய்து செய்தார். இதனை முருகன் தட்டிக்கேட்டார்.

  இதில் கோபத்தில் இருந்து வந்த ஜனா அவரது நண்பரான சின்னையாபுரத்தை சேர்ந்த அந்தோணி ஆகிய இருவரும் நேற்று இரவு முருகனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து முருகனையும், அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டி கையால் சரமாரியாக தாக்கினர்.

  மேலும் கொலை செய்து விடுவதாக கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

  பின்னர் இதுகுறித்து முருகன் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஜனா, அந்தோணி ஆகியோரை கைது செய்தார். ஜனா மீது ஏற்கனவே வெடிகுண்டு, அடிதடி, வழிபறி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும், அவர் ரடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×