search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student arrest"

    • சிறுவன் நீண்ட நேரமாகியும் விடுதிக்கு திரும்பாததால் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கத்தப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் தனியார் பவுண்டேசன் சார்பில் அரபி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

    சம்பவத்தன்று அரபி பள்ளியில் படிக்கும் ஷாநவாஸ் (வயது 9) என்ற சிறுவனுக்கும், அவருடன் படிக்கும் 13 வயது மாணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் அங்கு காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவன் ஷாநவாசை சரமாரியாக குத்தினான்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷாநவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். பதட்டத்தில் கொலை செய்ததை உணர்ந்த 13 வயதுடைய மாணவன் சிறுவனின் உடலை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சி செய்தான்.

    அதன்படிஅருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ஷாநவாஸ் உடலை போட்டு மறைத்து விட்டு எதுவும் நடக்காததுபோல் மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டான்.

    இதற்கிடையில் சிறுவன் ஷாநவாஸ் நீண்ட நேரமாகியும் விடுதிக்கு திரும்பாததால் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் மேலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது 13 வயது மாணவனின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் ஷாநவாசை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டான். சிறுவன் ஷாநவாஸ், தனது தாயை தவறாக பேசியதால் கொலை செய்ததாக அழுது கொண்டே தெரிவித்தான்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போலீசார் கழிவுநீர் தொட்டியில் கிடந்த ஷாநவாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 9 வயது சிறுவனை சக மாணவன் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணத்துக்கு மறுத்ததோடு கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று கூறி மிரட்டி வருகிறார்.
    • காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவி புகார் மனு அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தாய் சென்னையில் வேலை செய்து வருகிறார். நான் எனது தந்தையுடன் திருப்பூரில் தங்கி இருந்து படித்து வந்தேன்.

    கல்லூரியில் என்னுடன் படிக்கும் வெற்றிவேல் (வயது 17) என்பவர் என்னுடன் நண்பராக பழகி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தந்தை வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனை அறிந்து கொண்ட வெற்றிவேல் எனது வீட்டிற்கு வந்து நாம் இருவரும் சேர்ந்து படிக்கலாம் என கூறினார்.

    அப்போது வெற்றிவேல் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதே போல் மீண்டும் ஒருமுறை உல்லாசத்திற்கு அழைத்த போது நான் மறுத்தேன். உடனே அவர், ஏற்கனவே உல்லாசமாக இருந்ததை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி பலமுறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்.

    இதனால் நான் கர்ப்பமானேன். இது குறித்து வெற்றிவேலிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்ததோடு இந்த கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று கூறி என்னை மிரட்டி வருகிறார்.

    எனவே என்னை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்த மனு குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கல்லூரி மாணவர் வெற்றிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    • கொடுங்கையூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்.
    • புகாருக்குள்ளான மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டான்.

    சென்னை:

    கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியும், எம்.கே.பி.நகர் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தனர்.

    பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளின் போது இருவரும் சந்தித்து பேசினர். அப்போது பிளஸ்-1 படித்து வந்த மாணவன், மாணவியை காதல் வலையில் வீழ்த்தினான். மாணவியை ஏமாற்றி தனியாக அழைத்துச் செல்வதை அவன் வழக்கமாக வைத்திருந்தான்.

    இந்த நிலையில் மாணவனின் நண்பர் ஒருவர் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். பிளஸ்-2 படித்து வந்த போது அங்கு 2 முறை மாணவியை ஏமாற்றி அழைத்துச் செள்றுள்ளான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு முறையும், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு முறையும் மாணவன், மாணவியை அழைத்துச் சென்று அறையில் பேசிக்கொண்டு இருந்துள்ளான்.

    அப்போது அந்த வீட்டில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்ற மாணவன் அங்கு வைத்து உல்லாசமாக இருந்துள்ளான்.

    இதன் பின்னர் ஒன்றும் தெரியாதது போல பிளஸ்-2 படிப்பையும் முடித்து விட்டு மாணவன் கல்லூரியில் சேர்ந்து விட்டான். இந்த நிலையில் மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அவரது தாய் எழும்பூரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு மாணவியை அழைத்துச் சென்று பரிசோதித்தார். அப்போது பெண் டாக்டர் ஒருவர் மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்திய போது தான் பிளஸ்-2 படித்த மாணவன் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதை கூறி கதறி அழுதார். இது பற்றி உடனடியாக கொடுங்கையூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்.

    இதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புகாருக்குள்ளான மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    பாதிக்கப்பட்ட மாணவியிடம் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

    • தப்பி ஓடிய சிறுவனை தேடி கண்டுபிடித்து அவனிடம் இருந்த செல்போனை போலீசார் வாங்கி பார்த்தனர்.
    • போலீசார் சிறுவனின் செல்போனை முழுமையாக ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    சென்னை கொடுங்கையூர் எம்.கே.பி. நகர் பகுதியில் ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக இவர் கிளம்பினார்.

    இதையடுத்து வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்று குளித்தார். அப்போது தனது வீட்டு அருகில் வசிக்கும் சிறுவன் ஒருவன் மறைந்திருந்து ஜன்னல் வழியாக படம் பிடிப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குளியல் அறையில் இருந்து வெளியில் வந்து சிறுவனை சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் திரண்டனர். அதற்குள் சிறுவன் அங்கிருந்து ஓடி விட்டான்.

    இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய சிறுவனை தேடி கண்டுபிடித்து அவனிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்தனர். அப்போது குளியல் காட்சிகளை சிறுவன் அழித்திருந்தான்.

    இருப்பினும் போலீசார் சிறுவனின் செல்போனை முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது ஐ.டி.பெண் ஊழியரின் குளியல் காட்சிகள் சேமிக்கும் பகுதியில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த அவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் எம்.கே.பி. நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.
    • மாணவனின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரி மூலம் அவர் ஆபாச படம் பதிவிறக்கம் செய்வதை கண்டுபிடித்தனர்.

    தெலுங்கானா மாநிலம், மெஹபூபாத்தை சேர்ந்த மாணவர் ராமானந்தபூரில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். சிறுமிகளின் ஆபாச படங்களை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து வந்தார்.

    மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.

    மாணவனின் இந்த செயல்களை அமெரிக்காவில் உள்ள சிறுவர் ஆபாச பதிவிறக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்காணித்தது.

    மாணவனின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரி மூலம் அவர் ஆபாச படம் பதிவிறக்கம் செய்வதை கண்டுபிடித்தனர்.

    அந்நாட்டு நோடல் ஏஜென்சி மூலம் இந்தியாவில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு மாணவர் குறித்த தகவல்களை தெரிவித்தனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தெலுங்கானா மாநில போலீசாருக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பு அனுப்பிய மாணவரின் தகவல்களை அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து தெலுங்கானா போலீசார் மாணவனின் செல்போன் டவர் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாகையிலிருந்து மோப்பநாய் தூலிப் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடிச்சென்றது.
    • துர்கா தேவி வசித்த தேத்தாகுடி தெற்கிற்கும் பிணம் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). இவரது மனைவி துர்கா தேவி (வயது 42). இவர்களது மகன் தினேஷ் (20) . இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சுந்தரமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து தங்கி விவசாய தொழிலை செய்து வருகிறார்.

    சுந்தரமூர்த்தியின் மனைவி துர்கா தேவி 18-ந்தேதி இரவு வீட்டில் இருந்து 8 மணிக்கு மகளிர் சுயஉதவி குழுவிற்கு கடன்தொகை கட்டி விட்டுவருவதாக சென்றுள்ளார். இரவு 11 மணி ஆகியும் தூர்காதேவி வீட்டுக்கு வராதால் கணவரும் அவரது மகனும் அக்கம்பக்கம் தேடி பார்த்து உள்ளனர்.

    எங்குதேடியும் கிடைக்காததால் காலையில் தேடிக் கொள்ளலாம் என இருவரும் தூங்கிவிட்டனர். பின்பு காலையில் எழுந்து தேடி பார்க்கும் பொழுது புஷ்பவனம் கடற்கரையில் ஒரு பெண் பிணம் படுகாயத்துடன் கிடப்பதாக வாட்ஸ்அப்பில் வந்த தகவலை பார்த்த கணவன் சுந்தரமூர்த்தி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று போய் பார்த்தபோது இறந்தது துர்காதேவி தான் என தெரிய வந்தது. இது குறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார்.

    வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பசுபதிமற்றும் போலீசார் புஷ்பவனம் கடற்கரைக்குச் சென்று பிணத்தை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு நாகையிலிருந்து தடவியியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர்.

    நாகையிலிருந்து மோப்பநாய் தூலிப் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்பு போலீசார் சம்பவம் நடைபெற்ற புஷ்பவனம் செம்போடை, தேத்தாகுடி தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று குழுவிற்கு பணம் கட்டி விட்டு வருவதாக கூறிச் சென்ற தூர்காதேவியை யாரேனும் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்து கடற்கரையில் பிணத்தை வீசினார்களா? அல்லது தேத்தாகுடி தெற்கில் கொலை செய்து வாகனத்தில் வந்து புஷ்பவனம் கடற்கரையில் பிணத்தை வீசிவிட்டு சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துர்கா தேவி வசித்த தேத்தாகுடி தெற்கிற்கும் பிணம் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துர்கா தேவி வீட்டில் இருந்து கிளம்பிய ஒரு மணி நேரம் அவரது செல்ஃபோன் வேலை செய்துள்ளது. பின்பு அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது என்பது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தனி படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நேற்று காலை வேதாரண்யம் தென்னம்புலம் பெட்ரோல் பங்கு அருகே புஷ்பவனத்தை சேர்ந்த அழகுக்கண்டர் காட்டை சேர்ந்த சுந்தரவடிவேலுவின் மகன் அருண் (வயது 20) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அருண் சேலம் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு மயக்கவியல் படித்து வருகிறார். இவர் கொல்லிமலையில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து வேதாரண்யம் பகுதியில் விற்பனை செய்வதற்கு தனது வாட்ஸ்அப் மூலம் விளம்பரபடுத்தி இருந்தார். இதில் தூர்கா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து உள்ளனர். இதில் அருண் பிறந்தநாள் அன்று இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். அப்பொழுது அருண் தூர்கா தேவிக்கு 1 பவுன் நகை பரிசாக கொடுத்துள்ளார். இது போல் பலமுறை பணம் கொடுத்து தூர்கா தேவியுடன் உல்லாசமாக இருந்து உள்ளார்.

    இதே போல் சம்பவத்தன்று தூர்காதேவியை புஷ்பவனம் கடற்கரைக்கு அழைத்து சென்று இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். பின்பு துர்கா தேவி அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறி காரை எடுக்கும் பொழுது துர்கா தேவிக்கும் அருணுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்கவில்லை என்றால் தங்களின் உறவை வெளியே சொல்லி விடுவேன் என துர்கா தேவி மிரட்டி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அருண் மூன்று முறை காரை விட்டு துர்கா தேவியை மோதி உள்ளார். இதில்சம்பவ இடத்திலேயே துர்கா தேவி இறந்து விட்டார். பின்பு அருண் துர்கா தேவி பிணத்தை எடுத்து கடற்கரையில் போட்டு சென்று விட்டார் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து அருணை போலீசார் கைது செய்து உள்ளனர். கள்ளக்காதலில் உல்லாசமாக இருந்து விட்டுஅதை வெளியில் சொல்லி விடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதால் கொலை செய்த இச்சம்பவம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாங்காட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 8-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் மாங்காடு பட்டூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார்.

    தினசரி பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதான பள்ளி மாணவன், சிறுமியுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம்.

    இந்த நிலையில் விளையாடுவது போல நடித்து பள்ளி மாணவன் அடிக்கடி சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளான். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் பூந்தமல்லி அனைத்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவனை கைது செய்தனர்.
    வடமதுரை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த வழக்கில் பிளஸ்2 மாணவனை போலீசார் கைது செய்தனர். #DindigulGirlMolested
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பபட்டியில் 7ம் வகுப்பு மாணவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். சிறுமி வாயில் மின் வயரை கடித்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கீறல்களும், ரத்த காயமும் இருந்தது. இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது வீட்டுக்கு அருகே உள்ள 3 சிறுவர்களே இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், சிறுமியைக் கொன்றது அதே பகுதியைச் சேர்ந்த கிருபானந்தன் என தெரியவந்தது. பிளஸ் 2 படித்துள்ள அவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், உயிருக்குப் போராடிய சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக தெரியவந்துள்ளது. அவனை போலீசார் கைது செய்துள்ளனர். #DindigulGirlMolested
    பள்ளிக்கரணை அருகே என்ஜினீயரிங் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ஸ்ரீநாத். தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகினார்.

    இந்த நிலையில் ஸ்ரீநாத், எதிர்கால வாழ்க்கை குறித்து பேசவும், பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் கூறி மாணவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

    இதனை நம்பிய மாணவி, ஸ்ரீநாத்தின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு அவரது பெற்றோர் இல்லை. இதனை தொடர்ந்து மாணவியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று தனது குழந்தை பருவ புகைப்படத்தை காண்பித்ததாக ஸ்ரீநாத் கூறினார்.

    அப்போது அங்கு ஏற்கனவே திட்டமிட்டப்படி மற்றொரு அறையில் ஸ்ரீநாத்தின் நண்பரான யோகேஷ் மறைந்து இருந்தார்.

    அவர், ஸ்ரீநாத்தும் மாணவியும் நெருக்கமாக இருக்கும் காட்சியை வீடியோவாகவும், மாணவியை ஆபாசமாகவும் புகைப்படம் எடுத்தார்.

    இதற்கிடையே மறுநாள் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீநாத், மாணவியிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டினார். மேலும் இதனை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவதாகவும் கூறினார்.

    இதனை செய்யாமல் இருக்க மீண்டும் வீட்டுக்கு வர வேண்டும். கூடுதலாக பணம் தர வேண்டும் என்று ஸ்ரீநாத்தும், யோகேசும் மாணவிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநாத், யோகேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை மாவட்டம் வால்பாறையில் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 12-ம் வகுப்பு மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த கூலித் தொழிலாளியின் 7 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சிறுமியின் தாய் அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது சிறுமி வீட்டில் இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது சிறுமி மாயமாகி இருந்தார்.

    இதனையடுத்து அவரது தாயார் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது எதிரே உள்ள வீட்டின் கதவை தட்டினார். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த வீட்டில் வசிக்கும் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் கதவை திறந்தான்.

    அப்போது வீட்டில் உள்ள இரும்பு கட்டில் அடியில் இருந்து சிறுமி அழுது கொண்டே வெளியே ஓடி வந்தார். இதனை பார்த்து சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார்.

    சிறுமியிடம் விசாரித்த போது சிறுமிக்கு 12-ம் வகுப்பு மாணவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    இது குறித்து சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 12-ம் வகுப்பு மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
    தெலுங்கானாவில் காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவரை போலீசார் கைது செய்தனர். #Love ##RavaliRao
    நகரி:

    தெலுங்கானா மாநிலம் வரங்கல்லை அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் ரவளி. இவர் வரங்கலில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இதே கல்லூரியில் சங்கம் கிராமத்தை சேர்ந்த சாயி அன்வேஷ் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இவர் மாணவி ரவளியிடம் தன்னை காதலிக்குமாறு தெரிவித்தார். அதை அவர் ஏற்கவில்லை. ஆனால் சாயி அன்வேஷ் காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அதற்கு ரவளி மறுத்து விட்டார்.

    இன்று காலை ரவளி கல்லூரி நுழைவாயில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாயி அன்வேஷ் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ரவளி மீது திடீரென்று ஊற்றினார்.

    இதை பார்த்து சக மாணவர்கள் சாயி அன்வேஷ் ஆசிட் வீசுவதாக நினைத்துக் கொண்டு சிதறி ஓடினார்கள். அப்போது சிகரெட் லைட்டரை ரவளி மீது வீசிவிட்டு ஓடிவிட்டார்.

    இதில் ரவளி உடலில் தீப்பிடித்து எரிந்தது. அலறி துடித்த அவரை மாணவர்கள் தீயை அணைத்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தப்பி ஓடிய சாயி அன்வேஷை சில மாணவர்கள் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.



    தீயில் கருகிய மாணவி ரவளி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். #Love ##RavaliRao
    கோயம்பேடு அருகே கஞ்சாவுடன் மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு நூறடி சாலையில் இன்று காலை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியார் வணிக வளாகம் முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து அவரது பையை சோதனை செய்தனர்.

    அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஜூமோன்மியா (வயது20) என்பதும் பாண்டிச்சேரியில் தங்கி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நஜூமோன்மியா யாரிடம் இருந்து கஞ்சா பெற்றார், கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருகிறாரா என்கிற கோனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×