என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineering student"

    • முன்னாள் காதலன் தனது அந்தரங்க வீடியோக்களையும், படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.
    • தனது கடந்த காலத்தை பற்றி தனது புதிய காதலன் தெரிந்து கொள்வதை இளம்பெண் விரும்பவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவில் உள்ள சசுவேகட்டாவை சேர்ந்த 19 வயது என்ஜினீயரிங் மாணவரும், 17 வயது இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு அந்த பெண் வேறொரு வாலிபருடன் நெருக்கமாக பழகுவதை கண்டு முன்னாள் காதலனான என்ஜினீயரிங் மாணவர் கோபம் அடைந்தார்.

    காதலித்தபோது அந்த மாணவரும், அந்த பெண்ணும் பரிமாறிக் கொண்ட அந்தரங்க தகவல்கள், புகைப்படங்கள் மாணவனின் செல்போனில் இருந்தது. இதனால் அந்த பெண், மாணவனின் செல்போனில் உள்ள தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கும்படி மாணவனிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். எல்லாவற்றையும் நீக்கிவிடும்படி பலமுறை அந்த பெண் கேட்டபோது, மாணவன் தனது நண்பர்களிடம் அவற்றை காட்டியதாக கூறினார். மேலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதாகவும் மிரட்டினார்.

    இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். முன்னாள் காதலன் தனது அந்தரங்க வீடியோக்களையும், படங்களையும் வைத்திருப்பதை நினைத்து கவலைப்பட்ட அந்த பெண், தனது நெருங்கிய தோழியின் உதவியை நாடினார்.

    தனது கடந்த காலத்தை பற்றி தனது புதிய காதலன் தெரிந்து கொள்வதை அவர் விரும்பவில்லை. இந்த பிரச்சினையை தோழி தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து தோழி ஏற்பாட்டின்பேரில் 12 பேர் கும்பல் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி இளம்பெண்னின் முன்னாள் காதலனான என்ஜினீயரிங் மாணவரை ஹெசரகட்டாவில் உள்ள ஏஜிபிலேஅவுட்டுக்கு காரில் கடத்தி வந்தனர்.

    அங்குள்ள ஏரிக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய இடத்தை கார் அடைந்தது. பின்னர் அந்த மாணவரை தரையில் உட்கார வைத்து, மற்றவர்கள் சுற்றி நின்று பிரம்பு கம்பால் இரக்கமின்றி அடிக்க தொடங்கினர். மேலும் முன்னாள் காதலி வாலிபரை நிர்வாணப்படுத்தி ஓட, ஓட விரட்டி தாக்கினார். பின்னர் அந்த இளம்பெண் தனது செல்போனில் அதை வீடியோவாக எடுத்தார்.

    அப்போது அந்த பெண், அவரிடம் தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நீக்குமாறு கூறினார். அதற்கு அவர் அனைத்தும் செல்போனில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக பதிலளித்தார். இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சந்தேகம் அடைந்து மாணவரின் செல்போனை வாங்கி அதில் இருந்த அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் நீக்கினார்.

    இந்த சம்பவத்தில் காயம் அடைந்த முன்னாள் காதலன் இது குறித்து சோலதேவனஹள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கடத்தல் கும்பல் சேஷாத்ரிபுரத்தை சேர்ந்த சிவசங்கர் (20), கணபதிநகரை சேர்ந்த யஷ்வந்த் படேல் (20), நெலமனகலை சேர்ந்த ஹேமந்த் (18), டி.தாசரஹள்ளியை சேர்ந்த சல்மான் கான் (23), உல்லாலை சேர்ந்த ராகுல் (20), தேஜாஸ் (18), ஹெசரகட்டாவை சேர்ந்த ராகேஷ் (21) மற்றும் யஷ்வந்த்பூரைச் சேர்ந்த ஷஷாங்க் கவுடா (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள ஹேமந்த், சூர்யா மற்றும் விஷால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சல்மான் கான் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், மற்றவர்கள் மாணவர்கள் ஆவர்.

    • மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டார்.

    கோவை

    சேலத்தை சேர்ந்த 21 வயது மாணவி. இவர் நெல்லையில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    அப்போது அதே கல்லூரியில் படித்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுதத்து அவர்கள் மாணவியை நெல்லை அண்ணா பல்கலை கழகத்தில் இருந்து மாறுதல் பெற்று கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்தனர். பெற்றோர் காதலை பிரித்ததால் மாணவி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று கல்லூரி விடுதியில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார்.இதனை பார்த்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து சென்று மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மாணவி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கல் குவாரி குட்டையில் குளிக்க சென்ற விஜய் சாரதி, தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
    • 200 அடி ஆழ கல்குவாரி குட்டை என்பதால் அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.

    வண்டலூர்:

    தருமபுரி மாவட்டம் கோபிநாத் பட்டியை சேர்ந்தவர் விஜய் சாரதி(வயது19). இவர் பொத்தேரியில் தங்கி அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமாலை விஜய்சாரதி மற்றும் உடன் படிக்கும் நண்பர்களான உடுமலைப் பேட்டையை சேர்ந்த தீபக் சாரதி(20), தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில்(19) உள்பட 5 பேருடன் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல் குவாரிகுட்டையில் குளிக்க சென்றனர். அப்போது விஜய் சாரதி, தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து காயார் போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு வரை தேடியும் 3 மாணவர்க ளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. 200 அடி ஆழ கல்குவாரி குட்டை என்பதால் அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கல்குவாரி குட்டையில் மாணவர்களை தேடும் பணி நடைபெற்றது. அப்போது விஜய் சாரதி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் தண்ணீரில் மூழ்கிய தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 2 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

    • இளம் பெண் தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
    • சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைனர் பெண் (வயது 18) இவர் இதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறி யியல் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலை யில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது தாய் புகார் அளித்துள்ளார்.

    இதேபோல் கள்ளக்கு றிச்சி அருகே ஏமப்பேர் பகுதி யைச் சேர்ந்தவர் மாதவன் மகள் கவுசல்யா (வயது 19). இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாதவன் புகார் அளித்துள்ளார். மேற்கண்ட புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஜாக்சன் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • ஜாக்சன் சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    நெல்லை

    முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஞானச்செல்வன்.இவரது மகன் ஜாக்சன் (வயது 21). இவர் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று ஜாக்சன் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக முக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜாக்சன் சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில நாட்களாக ஜாக்சன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுமந்தம்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத்(24).

    என்ஜினீயரிங் பட்டதாரி. தனது தந்தையின் சூப்பர்மார்க்கெட்டை கவனித்து வந்தார். கம்பத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் விரைந்து சென்று கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தப்பிஓடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    பள்ளிக்கரணை அருகே என்ஜினீயரிங் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ஸ்ரீநாத். தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகினார்.

    இந்த நிலையில் ஸ்ரீநாத், எதிர்கால வாழ்க்கை குறித்து பேசவும், பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் கூறி மாணவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

    இதனை நம்பிய மாணவி, ஸ்ரீநாத்தின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு அவரது பெற்றோர் இல்லை. இதனை தொடர்ந்து மாணவியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று தனது குழந்தை பருவ புகைப்படத்தை காண்பித்ததாக ஸ்ரீநாத் கூறினார்.

    அப்போது அங்கு ஏற்கனவே திட்டமிட்டப்படி மற்றொரு அறையில் ஸ்ரீநாத்தின் நண்பரான யோகேஷ் மறைந்து இருந்தார்.

    அவர், ஸ்ரீநாத்தும் மாணவியும் நெருக்கமாக இருக்கும் காட்சியை வீடியோவாகவும், மாணவியை ஆபாசமாகவும் புகைப்படம் எடுத்தார்.

    இதற்கிடையே மறுநாள் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீநாத், மாணவியிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டினார். மேலும் இதனை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவதாகவும் கூறினார்.

    இதனை செய்யாமல் இருக்க மீண்டும் வீட்டுக்கு வர வேண்டும். கூடுதலாக பணம் தர வேண்டும் என்று ஸ்ரீநாத்தும், யோகேசும் மாணவிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநாத், யோகேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    என்ஜினீயரிங் மாணவியை காதலிக்க சொல்லி மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோட்டைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தினமும் வீட்டில் இருந்து கல்லூரி பஸ்சில் சென்று வந்தார். நேற்று மாலை கல்லூரி பஸ்சில் வந்த மாணவி, ஆசாரிவிளை நிறுத்தத்தில் இறங்கினார்.

    அங்கிருந்து அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டுவிளையைச் சேர்ந்த ஜார்ஜ் (வயது 19), அவரது நண்பர்கள் விஜயன் (26), விஜூகுமார் (22) ஆகிய 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களில் ஜார்ஜ் தன்னை காதலிக்கும்படி மாணவியிடம் வற்புறுத்தினார். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஆத்திரம் அடைந்த ஜார்ஜ், என்னை காதலிக்காவிட்டால் உன்னை கடத்திச் சென்று விடுவேன் என எச்சரித்தார். அவருடன் வந்திருந்த 2 நண்பர்களும், ஜார்ஜை காதலிக்கும்படி மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். பின்னர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகாராகவும் கொடுத்தார்.

    அதில் காட்டுவிளையைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தன்னை காதலிக்கச் சொல்லி மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் ஜார்ஜ், விஜயன், விஜூகுமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் விஜயன், விஜூகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜை தேடி வருகிறார்கள்.

    நீலகிரியில் மாரடைப்பால் இறந்த என்ஜினீயரிங் மாணவர் வங்கியில் வாங்கியிருந்த கல்வி கடனை அதிகாரிகள் செலுத்திய சம்பவம் கோர்ட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் மகன் பாலமுரளி. இவர் ஊட்டியில் உள்ள ஓரியண்டல் வங்கியில் ரூ.1.3 லட்சம் கல்விக் கடன் பெற்று என்ஜினீயரிங் படித்தார். கணவர் இறந்த பின்னர் தாய் மட்டுமே மகனை படிக்க வைத்தார்.

    பாலமுரளி ரூ.30 ஆயிரம் மட்டுமே வங்கியில் செலுத்தியிருந்தார். இந்நிலையில் மீதி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று பாலமுரளிக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பாலமுரளி திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் பாக்கி வங்கிக் கடனை திருப்பிச்செலுத்தாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான வடமலையின் பரிந்துரையின் பேரில் வாராக்கடன் தொடர்பான மத்தியஸ்த கூட்டம் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார் தலைமையில் ஊட்டியில் நேற்று நடைபெற்றது.

    இதில், வங்கியின் மேலாளர் பிரேம், பாலமுரளியின் வக்கீல் நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கத்தலைவருமான ஸ்ரீஹரி ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில், பாலமுரளியின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, வங்கிக்கு அவர் செலுத்த வேண்டிய ரூ. 1 லட்சத்தில் 90 ஆயிரத்தை தள்ளுபடி செய்துவிடுவதாக வங்கி மேலாளர் பிரேம் அறிவித்தார்.

    இருப்பினும், மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை கண்டிப்பாக கட்ட வேண்டும் என தெரிவித்ததார். இதனையடுத்து நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார், வக்கீல் ஸ்ரீஹரி, வங்கி மேலாளர் பிரேம் ஆகிய மூவரும் சேர்ந்து பாக்கி தொகையான ரூ.10 ஆயிரத்தை செலுத்தி மாணவரையும், அவரது தாயாரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தனர்.

    இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    நீட் தேர்வு காரணமாக மருத்துவ கனவு கலைந்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோயம்பேடு:

    சேலையூர், மகாலட்சுமி நகர், புறநானூறு தெருவை சேர்ந்தவர் எட்வர்ட். தாம்பரம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் ஏஞ்சலின் சுருதி (வயது 19). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே தனது அறையில் இருந்தார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள படுக்கை அறையில் ஏஞ்சலின் சுருதி உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது தலையில் பாலித்தீன் கவர் மாட்டப்பட்டு, செல்போன் வயர் கட்டப்பட்டு இருந்தது. அவர் தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிந்தது.

    இதனை கண்டு பதறிய பெற்றோர் ஏஞ்சலின் சுருதியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏஞ்சலின் சுருதி பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு பெற்றோர் கதறி துடித்தனர்.

    இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ‘நீட்’ தேர்வு எழுதியும் மருத்துவ சீட் கிடைக்காததால் ஏஞ்சலின் சுருதி தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    ஏஞ்சலின் சுருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ‘நீட்’ தேர்வில் பங்கேற்றார். இதில் அவர் குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. எனினும் மீண்டும் நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க ஏஞ்சலின் சுருதி ஆசையாக இருந்தார்.

    ஆனால் அவரை என்ஜினீயரிங் படிப்பில் சேர பெற்றோர் வற்புறுத்தி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்தனர்.

    மருத்துவ படிப்பில் நாட்டம் இருந்த ஏஞ்சலின் சுருதிக்கு என்ஜினீயரிங் படிக்க ஆசையில்லை. இதனால் அவர் அடிக்கடி கல்லூரிக்கு செல்லாமல் இருந்தார்.

    மேலும் மருத்துவ படிப்பு குறித்து அவர் அடிக்கடி உடன்படிக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் கூறி வந்தார். அவரை அவர்கள் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ஏஞ்சலின் சுருதி முகத்தில் பாலித்தீன் கவரை கட்டி தற்கொலை செய்து உள்ளார்.

    அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா ஏற்கனவே தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நீட் தேர்வால் தற்போது ஏஞ்சலின் சுருதியும் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவையில் மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பாலக்காட்டை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சிஜூ ஜோசப். இவரது மகன் சைனஸ் சிஜூ (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் சென்றார்.

    அப்போது காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் எதிரே சென்ற லோடு ஆட்டோ மீது மோதியது.

    இதில் சைனஸ் சிஜூ தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சைனஸ் சிஜூ பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.
    கோவையில் இருந்து சார்ஜாவுக்கு விமானத்தில் கஞ்சா கடத்த முயன்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவையில் இருந்து வளைகுடா நாடான சார்ஜாவுக்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று அதிகாலை 3 மணிக்கு சார்ஜாவுக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    பயணிகள் விமானத்தில் ஏற காத்து இருந்தனர். விமானம் ஏற வந்த வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் ஒரு பையில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் விசாரித்த போது அவர் சூடான் நாட்டை சேர்ந்த முகம்மது தாரிக் சாலிக் சடோல் (22) என்பது தெரிய வந்தது.

    இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
    ×