முக்கூடலில் விஷம் குடித்த என்ஜினீயரிங் மாணவர் சாவு

ஜாக்சன் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.ஜாக்சன் சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
முக்கூடலில் விஷம் குடித்த என்ஜினீயரிங் மாணவர்  சாவு
Published on

நெல்லை

முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஞானச்செல்வன்.இவரது மகன் ஜாக்சன் (வயது 21). இவர் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று ஜாக்சன் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக முக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜாக்சன் சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக ஜாக்சன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com