என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
உத்தமபாளையம் அருகே டிப்பர் லாரி மோதி என்ஜினீரியங் பட்டதாரி பலி
- மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுமந்தம்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத்(24).
என்ஜினீயரிங் பட்டதாரி. தனது தந்தையின் சூப்பர்மார்க்கெட்டை கவனித்து வந்தார். கம்பத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் விரைந்து சென்று கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பிஓடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story






