காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை முயற்சி

மனவேதனை அடைந்து காணப்பட்டார். அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டார்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை முயற்சி
Published on

கோவை

சேலத்தை சேர்ந்த 21 வயது மாணவி. இவர் நெல்லையில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

அப்போது அதே கல்லூரியில் படித்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுதத்து அவர்கள் மாணவியை நெல்லை அண்ணா பல்கலை கழகத்தில் இருந்து மாறுதல் பெற்று கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்தனர். பெற்றோர் காதலை பிரித்ததால் மாணவி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று கல்லூரி விடுதியில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார்.இதனை பார்த்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து சென்று மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மாணவி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com